சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே, ரயிலின் அவசரச் சங்கிலியை இழுத்து, கற்களை வீசி இடையூறு ஏற்படுத்திய மூன்று கல்லூரி மாணவர்களை சென்னையில் உள்ள ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
ஜூலை 18, 2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளச்சேரியில் இருந்து திருவள்ளூருக்குச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பயணித்த அரசுக் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலின் மீது கற்கள் வீசினர். இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: டி.ஐ.ஜி தற்கொலை விவகாரம், பேசு தமிழா பேசு நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் போலீசார் விசாரணை
இதுகுறித்து அதே கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றவாளிகள் மீஞ்சூரை சேர்ந்த ரோகித் மற்றும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், லோகேஷ் என போலீசார் அடையாளம் கண்டனர்.
மூன்று மாணவர்களும் ஜூலை 19, 2023 புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil