Advertisment

சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு: இந்த இடங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு

சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  வெப்ப நிலை அதிகமாக இருந்தது. கடல் காற்றும் இல்லாத நிலையில் இருந்தது. ஆனால் திங்கள்கிழமை சில இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் “ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடுத்த 2 நாட்களில் மழை, மாலை நேரத்தில் பெய்யும் “ என்று கூறியுள்ளார்.

மேலும் காலையில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கரு மேகங்கள் சூழ்ந்து சில இடங்களில் மழை பெய்தது. மீனம்பாக்கம் 2.2மில்லி மீட்டர்,  மேற்கு தாம்பரம் 6 மில்லி மீட்டர், அண்ணா பல்கலைக்கழகம் 7.5 மில்லி மீட்டர், பள்ளிக்கரணை 29.8 மில்லி மீட்டர், தரமணி 1 மில்லி மீட்டர், வை.எம்.சி.ஏ நந்தனம் 1.5 மில்லி மீட்டர், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி- காஞ்சிபுரம் 3.5 மில்லி மீட்டர்,  பூந்தமல்லி 7 மில்லி மீட்டர்.

இந்நிலையில் மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் 40.1 மற்றும் 40.8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்ததால், இந்த மழை மக்களுக்கு பெரும் நிவாரணத்தை கொடுத்தது.

“ தென்மேற்கு பருவமழை சரியாக தொடங்குவதற்கு  முன்பு, இதுபோன்ற மழை அவ்வப்போது பெய்யும். தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும் “ என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment