மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த் கனமழை காரணமாக சென்னை, மற்றும் சென்னையின் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கரையோரப் பகுதிகள் பெரிய அளவில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்புப் படையினரும் தன்னார்வலர்களும் பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலையில், “அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0kPo5bRbit2h7igysTdj71n39usSeXuViyUc5gE7udGk58hmkNYGmMr5kmR7k9EQ6l&id=100072237186621
இது தொடர்பாக பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத்-வல்-ஜமாத் ஃபேஸ்புக் பக்கத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் சார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “அஸ்ஸலாமு அலைக்கும் மழைநீர் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் பள்ளியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல. நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. (150 கிலோ அரிசி கொண்டு உண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக பூந்தமல்லி பெரிய மசூதியில் செவ்வாய்க்கிழமையும் பொதுமக்களுக்கு அடைக்கலம் அளித்து 3000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/100072237186621/videos/733489438172016/
“அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் மிக்ஜாம் புயலால் இரண்டாம் நாள் இன்றும் நிர்வாகத்தினர் முயற்சியால் ஆலோசனை குழ உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் அனைவரும் உத்வேகத்துடன் செயல்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெற்றது. 3000 நபர்களுக்கு உண்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மின்சாரம் தடைபட்டதால் தண்ணீர் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் பிடித்துக் கொள்ள சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியூரில் இருந்து வேலை பார்க்கும் பேஜ்சுலர்ஸ் பெண்கள் ஆண்கள் அனைவரும் தங்களது மொபைல் சார்ஜ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பெண்களுக்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும்..
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..
#பள்ளிநிர்வாகம்
#பூவிருந்தவல்லி
#அனைத்துசமுதாயம்
#பயன்படுகிறது
#பள்ளிவாசல்தொழுகைக்குமட்டும்அல்ல
#புகழுக்குரியவன்அல்லாஹ்ஒருவனே” என்று பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத்-வல்-ஜமாத் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருவெள்ளத்தில் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற பேரிடர்களின்போது, மதங்களைக் கடந்து மனிதநேயம் மலர்கிறது. பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும்தான் என்று அறிவித்து அனைவரையும் நெகிழச் செய்துள்ளது பூந்தமல்லி பள்ளிவாசல்.
இதே போல, சென்னை லொயலா கல்லூரியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.