சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் நவ.26 காலை 6 மணி முதல் நவ.27 காலை 6 மணி வரை அதிகபட்சமாக மணலி புது நகரில் 13.39 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்று பார்ப்போம். அதிகபட்சமாக மணலி புது நகரில் 13.39 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
அடுத்து அதிகபட்சமாக கனமழை பெய்த இடங்களில் திருவொற்றியூரில் 11.19 செ.மீ மழையும் மாதவரத்தில் 7. 20 செ.மீ மழையும் பெருங்குடியில் 7.02 செ.மீ மழையும் ராயபுரம் மற்றும் அடையாற்றில் 6. 69 செ.மீ மழையும் சோழிங்கநல்லூரில் 6.58 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அம்பத்தூர், அண்ணா நகரில் மிதமான மழை பெய்துள்ளது.
தண்டையார்பேட்டையில் 6.06 செ.மீ மழையும் திரு.வி.க நகரில் 6.42 செ.மீ மழையும் அம்பத்தூரில் 5.34 செ.மீ மழையும் அண்ணா நகரில் 5.88 செ.மீ மழையும் தேனாம்பேட்டையில் 4.92 செ.மீ மழையும் பெய்துள்ளது.
இதேபோல கோடம்பாக்கத்தில் 5. 94 செ.மீ மழையும் வளசரவாக்கத்தில் 4.86 செ.மீ மழையும் ஆலந்தூரில் 6. 28 செ.மீ மழையும் பெய்துள்ளது. இங்கு மிதமான மழையாக பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“