கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்டை வாபஸ் பெற்றுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மிக கனமழை எச்சரிக்கையானது, கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 5.484 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 60.96% : புழல் - 71.3% : பூண்டி - 15.2% : சோழவரம் - 10.82%: கண்ணன்கோட்டை - 60.2%
ஆங்கிலத்தில் படிக்கவும்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 28, 2024 23:37 ISTசென்னையில் பலத்த காற்றுடன் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,
-
Nov 28, 2024 20:23 ISTஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக மாற வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, மணிக்கு 10கி.மீ தூரத்தில் நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து கரையை கடக்க கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 19:33 ISTகனமழை எச்சரிக்கை: கடலூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவம்பர் 29) அன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 18:33 ISTவானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும்; சென்னை விமான நிலைய நிர்வாகம்
புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Nov 28, 2024 17:53 IST22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Nov 28, 2024 17:48 ISTஇன்னும் ஓரிரு நாட்களில் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கும் - அமைச்சர் எம்.ஆர்.கே
இன்னும் ஓரிரு நாட்களில் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
-
Nov 28, 2024 17:17 ISTசென்னையில் மழை அதிகரிக்கும்
சென்னையில் இன்று இரவு மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
-
Nov 28, 2024 17:15 IST6 மீனவர்களும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
கடல் சீற்றத்தால் 2 நாட்களாக நடுக்கடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் 6 பேரையும், ஹெலிகாப்டர் மூலமாக கடலோர காவல் படை மீட்டது
-
Nov 28, 2024 16:02 IST52,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில்
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளது எனவே விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடிப் பயிர்களில் 52 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீரை வடிய வைப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததாலும், நாளை முதல் கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதாலும் அந்த பயிர்கள் அழுகும் தருவாயில் உள்ளன.
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் கூடுதலான செலவு செய்து வளர்த்த பயிர்கள் அழியும் நிலையில் இருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
-
Nov 28, 2024 15:54 ISTஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் - பாலச்சந்திரன் பேட்டி
தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரை இடைப்பட்ட்ட நேரத்தில் தற்காலிக புயலாக மாறும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 480 கி.மீ தெற்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும். வளிமண்டல கீழடுக்கில் காற்று குவிவது குறைந்ததால் நேற்று விடுக்கப்பட்ட ரெட் லர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
-
Nov 28, 2024 15:34 ISTஅதி கனமழை: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 29) செங்கபட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 29) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
Nov 28, 2024 15:11 ISTகடலூர் நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் 6 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து நடுக்கடலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். தனியார் துறைமுகத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இரண்டாவது நாளாக தவித்து வரும் அவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Nov 28, 2024 15:08 ISTகாரைக்காலில் தொடர் மழை: வெள்ளத்தில் மூழ்கிய 2000 ஏக்கர் விளைநிலங்கள் - விவசாயிகள் வேதனை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 2000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வெங்கள் புயலாக மாற உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.இன்று காலை வரை சுமார் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
காரைக்கால் அடுத்த தலத்தெரு மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.விளை நிலங்கள் நடுவே செல்லும் விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் இருபுறமும் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்படாமல் சீரமைக்காமல் உள்ளதால் மழை நீர் வடியாமல் பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Nov 28, 2024 15:06 ISTகாரைக்காலில் கனமழை: பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்ட கலெக்டர் மணிகண்டன்
காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று கலெக்டர் மணிகண்டன் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். பல்வேறு இடங்களில் பார்வையிட்டு அரசுத் துறை அலுவலர்களுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
காரைக்காலில் கனமழை: பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்ட கலெக்டர் மணிகண்டன்!#karaikal | #Puducherry pic.twitter.com/jd4NCx509U
— Indian Express Tamil (@IeTamil) November 28, 2024 -
Nov 28, 2024 14:35 ISTதிசை மாறி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு?
வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 14:31 ISTநவ.30-ல் சென்னைக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் அறிவிப்பு
வருகிற 30-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 28, 2024 14:03 ISTநாளை 5 மாவட்டத்தில் மிக கனமழை
நாளை வெள்ளிக்கிழமை (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
Nov 28, 2024 14:01 ISTஇன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று (நவ.28) வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 28, 2024 13:35 IST'பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
"மழை விட்ட பிறகு சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்று நாகையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
Nov 28, 2024 13:12 ISTநாகையில் மீண்டும் தொடங்கிய கனமழை
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை தொடங்கியது. 4 நாட்களாக பெய்து வந்த மழை நேற்றிரவில் இருந்து குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடங்கியது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் நாகையில் கனமழை நாகூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நாகைக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது
-
Nov 28, 2024 12:32 ISTமீண்டும் நகராமல் நின்ற தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகராமல் நிற்கிறது. கடந்த சில மணி நேரங்களாக 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் மீண்டும் நகராமல் நிற்கிறது. நாகைக்கு தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
-
Nov 28, 2024 12:19 ISTபயிர்களுக்கு உரிய நிவாரணம்
மழை விட்ட பிறகு சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நாகையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்தார்.
-
Nov 28, 2024 11:34 ISTஇன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்
இன்று இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு. வட தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும். நாளை, நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்
கூறினார். -
Nov 28, 2024 10:56 ISTபிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மநிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Nov 28, 2024 10:47 ISTபாம்பனில் 3 ஆவது நாளாக கடல் சீற்றம்
பாம்பனில் 3 ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மண்டபம்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 10:38 IST"நவ. 29,30 தேதிகளில் கனமழை பெய்யும்" - பிரதீப் ஜான்
நவ. 29,30 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Nov 28, 2024 10:08 ISTதமிழ்நாட்டில் நாளை மறுநாள் (நவ.30) ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 09:14 ISTநாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
Nov 28, 2024 09:09 ISTமேம்பாலம் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தம்
புயல் காரணமாக பலத்த காற்று வீசி வருவதால், சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் சாலை, ராயபுரம் மேம்பாலம் அருகே சாலையில் இருபுறமும் பொதுமக்கள் தங்களுடைய சொகுசு கார்களை நிறுத்தி வருகின்றனர்.
-
Nov 28, 2024 09:07 ISTபுயல் உருவாவதில் மேலும் தாமதம்
சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியதால் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 28, 2024 08:39 ISTதமிழ்நாட்டில் நவம்பர் 29, 30 ஆகிய 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
-
Nov 28, 2024 08:22 ISTகாலநிலை மாற்றத்தால் விமான சேவையில் பாதிப்பு
மோசமான காலநிலை காரணமாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சியில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் காலநிலை சீராகும் போது சேவையும் சீராகும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
-
Nov 28, 2024 08:18 ISTதமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Nov 28, 2024 07:51 ISTமரக்காணத்தில் 2 ஆவது நாளாக கடல் சீற்றம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து, 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
-
Nov 28, 2024 07:29 ISTபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழையையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது,
-
Nov 28, 2024 07:27 IST12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Nov 27, 2024 22:48 IST4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 28-ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Nov 27, 2024 22:12 ISTமெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த இது, தற்போது 3 கி.மீ வேகத்தில் நகர்கிறது. நாகைக்கு 320 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 500 கி.மீ தொலைவிலும் புயல் சின்னம் உள்ளது.
-
Nov 27, 2024 21:16 IST4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு இன்று (நவ 27) கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Nov 27, 2024 21:03 ISTபுயல் உருவாவதில் தொடர் தாமதம்
புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயல் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 27, 2024 20:09 ISTபல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை (நவ 28) நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 27, 2024 19:15 ISTகனமழை எதிரொலி - விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ 28) விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.கனமழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Nov 27, 2024 19:09 ISTமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும், மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Nov 27, 2024 18:51 ISTஃபீஞ்சல் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை காவல்துறை
ஃபீஞ்சல் புயலை எதிர்கொள்ள சென்னை காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 காவல் மாவட்டங்களிலும் சிறிய கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் எஸ்.ஐ தலைமையில் 12 காவல் துறையினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள், தீயணைப்பு, வாகனங்கள், ஆம்புலன்ஸ் படகுகள் உள்ளிட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Nov 27, 2024 18:40 ISTஃபீஞ்சல் புயல் எதிரொலி: கோடியக்கரையில் பழுப்பு நிறமாக மாறி உள்வாங்கிய கடல்
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபீஞ்சல் புயலாக மாற உள்ள நிலையில், கோடியக்கரையில் கடல் பழுப்பு நிறமாக மாறி உள்வாங்கி காணப்படுகிறது.
-
Nov 27, 2024 18:30 ISTஃபீஞ்சல் புயல் எதிரொலி: பழவேற்காட்டில் கடல் சீற்றம்
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபீஞ்சல் புயலாக மாற உள்ள நிலையில், பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளது.
-
Nov 27, 2024 17:17 ISTதமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தென்காசி விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வெலி கன்னியாகுமரி திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 27, 2024 17:11 ISTஃபீஞ்சல் புயல் எதிரொலி: புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடல்
ஃபீஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியில் காலை முதலே கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
-
Nov 27, 2024 16:52 IST3 நாட்களுக்கு அதிதீவிர கனமழை - இந்திய வானிலை மையம் அறிவிப்பு
"இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்யும். ஃபீஞ்சல் புயலால் தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் உருவாகும் ஃபீஞ்சல் புயல்.
தமிழகத்தில் தீவிர முதல் அதிதீவிர கனமழை பெய்யும். அரசுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
Nov 27, 2024 16:39 ISTகுடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கை கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்படைந்த்துள்ளன. மேலும், பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் நகர்ந்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.