Advertisment

Fengal Cyclone Highlights: புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபீஞ்சல் புயல் இன்று (நவ.30) பிற்பகல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN to recieve heavy rainfall weekend and till nov 14 IMD forecasts Tamil News

மழை நிலவரம்

Fengal Cyclone Chennai Updates: ஃபீஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Tamil Nadu Weather Today, Cyclone Fengal LIVE Updates: Schools shut in Puducherry, Chennai and neighbouring districts as region braces for extremely heavy rain

சென்னையில் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் பொதுபோக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஏரிக்கு வினாடிக்கு 449 கன நீர்வரத்து உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 01, 2024 00:27 IST
    4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Nov 30, 2024 22:06 IST
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

    ஃபீஞ்சல் புயல் எதிரொலியாக சென்னையில் உள்ள மாநில மின்பளு பகிர்ந்தளிப்பு மையத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.



  • Nov 30, 2024 22:02 IST
    செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு  

    செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,640 கன அடியாக அதிகரித்துள்ளது. இது காலை 6 மணியளவில் 449 அடியாக இருந்தது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,364 கன அடியாக அதிகரித்துள்ளது. இது காலை 6 மணிக்கு 333 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Nov 30, 2024 21:37 IST
    கட்டுப்பாட்டு அறையில் ஸ்டாலின் ஆய்வு

    ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உதவிகள் குறித்து, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.



  • Nov 30, 2024 21:25 IST
    புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகலாம்

    புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரிக்கு அருகே வட தமிழக பகுதியில் மூன்றரை மணி நேரமாக புயல் கடையை கடக்கிறது.



  • Nov 30, 2024 21:21 IST
    மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

    வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Nov 30, 2024 21:19 IST
    67 சதவீதம் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பான வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 67 சதவீதம் வரை மட்டுமே நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 20:32 IST
    திரைப்பட எடிட்டர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி

    ரஜினிகாந்த் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படத்தின் எடிட்டர் பிரவீன் குமார் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.கே. நகரில் மளிகை பொருள் வாங்க சென்ற போது மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 20:11 IST
    புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்

    புயல் கரையை கடப்பதால் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.



  • Nov 30, 2024 19:29 IST
    10 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு

    10 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 30, 2024 19:24 IST
    சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை வாபஸ்

    சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதி கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 30, 2024 19:09 IST
    நிலப்பரப்பை அடைந்த ஃபீஞ்சல் புயல்

    ஃபீஞ்சல் புயலின் முன்பகுதி நிலப்பரப்பை அடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 19:03 IST
    சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3-வது நபர் உயிரிழப்பு

    சென்னை, வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இசைவாணன் என்பவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Nov 30, 2024 18:53 IST
    நாளை காலை வரை புயல் கரையைக் கடக்கும்

    ஃபீஞ்சல் புயல் கரையைக் கடக்க, இன்று இரவு முதல் நாளை (டிச 1) காலை வரை நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடந்ததும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, படிப்படியாக வலு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 18:37 IST
    7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கனமழை எதிரொலியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.



  • Nov 30, 2024 18:33 IST
    கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

    கோவை மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 18:29 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

    செம்பரம்பாக்கம் ஏரி மதகு பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



  • Nov 30, 2024 18:22 IST
    மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.



  • Nov 30, 2024 18:19 IST
    வங்கித் தேர்வு ஒத்திவைப்பு

    சென்னையில் நாளை (டிச.1) நடைபெறுவதாக இருந்த CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 18:18 IST
    அதிகாலை 4 மணிவரை விமான நிலையம் மூடல்

    சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Nov 30, 2024 18:16 IST
    50 கி.மீ தொலைவில் ஃபீஞ்சல் புயல்

    ஃபீஞ்சல் புயல் சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 80 கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 30, 2024 17:35 IST
    நெருக்கும் புயல் தாக்கம்: கலக்கரை விளக்க ரேடார் இயக்குவது நிறுத்தம்

    ஃபீஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று வீசுவதால் மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் இருக்கும் ரேடார் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது, சேதமாகாமல் தடுக்க ரேடார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க பராமரிப்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Nov 30, 2024 17:32 IST
    கனமழை எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை மாற்றம்

    Train No 22623/22624 மதுரை சென்னை எழும்பூர் வாரமிருமுறை மகால் அதிவிரைவு ரயில் 06.12.2024 முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.  சென்னை எழும்பூர் செல்லாது என்றும் மதுரை தாம்பரம் அதிவிரைவு சேவையாக  இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது



  • Nov 30, 2024 17:02 IST
    கலக்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலை வரை மூடல்

    .ஃபீஞ்சால் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் பயங்கார காற்று வீசி வருவதால்,  கலக்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலை வரை மூடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



  • Nov 30, 2024 17:00 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிலவரம்

    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், மாலை 4 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 4,856 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரிப் பகுதியில் 14 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.31 அடிக்கு தற்போது நீர் உள்ளது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவில், தற்போது 2436 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



  • Nov 30, 2024 16:37 IST
    கனமழை எதிரொலி: புதுச்சேரியில் சுற்றுலா தளங்கள் மூடல்

    புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடற்கரை பகுதிகள், சுற்றுலா தளங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

    வங்க கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.இதனால் அலைகள் 7 அடி வரை ஆக்ரோஷமாக எழுவதால் ராக் பீச்,பாண்டி மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.  புயல் காரணமாக துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், 5-வது நாளாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால் குளிர்ந்த சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வார இறுதி நாளான இன்று பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், புயல் தொடர்பான புகார்களுக்கு இலவச உதவி எண்களான 112,107, மற்றும் வாட்ஸ் அப் எண் 9488981070 ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Nov 30, 2024 16:30 IST
    மரக்காணம் ஜும்மா மசூதி சாலையில் பழமையான மரம் விழுந்து விபத்து

    சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமர்கு மரக்காணம் ஜும்மா மசூதி சாலைப் பகுதியில் இருந்த பழமையான மரம் விழுந்தது. தற்போது இந்த மரத்தை அகற்றும் பணிக்காக என்டி.ஆர்.எஃப் (NDRF) படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.



  • Nov 30, 2024 16:25 IST
    சென்னையில் கனமழை: நந்தனத்தில் அடியோடு பெயர்ந்து விழுந்த பேருந்து நிறுத்தம்

    சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் தொடர் மழையால் நந்தனம் மெட்ரோ அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அடியோடு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இருவர் காயமின்றி தப்பினர்.



  • Nov 30, 2024 16:24 IST
    மழை நின்று ஒரு மணிநேரத்திற்குள் அங்கும் தண்ணீர் வடிந்துவிடும்: உதயநிதி ஸ்டாலின்!

    சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.. மழை நின்று ஒரு மணிநேரத்திற்குள் அங்கும் தண்ணீர் வடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.



  • Nov 30, 2024 16:10 IST
    சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் 8,000 கனஅடி பாய்ந்தோடுகிறது.  மழை நீருக்கு பயந்து முடிச்சூர் மணிமங்கலம் சாலையில் கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை நிறுத்தியுள்ளனர். அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது



  • Nov 30, 2024 16:07 IST
    சென்னையில் கனமழை: வன உயிரினங்களை காப்பற்ற உதவி எண் அறிவிப்பு

    சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு 044-22200335 என்ற எண்ணில் சென்னை வன உயிரின கோட்ட தலைமையிட சரகத்தினை பொதுமக்கள் தொடர்கொள்ளலாம் என்று, வன உயிரின காப்பாளர் அறிவித்துள்ளார்.



  • Nov 30, 2024 16:03 IST
    மழை நீரில் மூழ்கிய சென்னை தியாகராயர் நகர் அரங்கநாதன் சுரங்கப் பாதை

    சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், புயல் மழையால் சென்னை தியாகராயர் நகர் அரங்கநாதன் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 16:00 IST
    கொட்டித்தீர்க்கும் கனமழை: பரிதவிக்கும் மக்களுக்கு தயாராகும் உணவு

    வடசென்னை ராயபுரம் பகுதியில் முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் கூடத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இங்கு உணவு தயாரிக்கப்படுவாகவும், அனைத்து பகுதகளுக்கும் இங்கிருந்து உணவுகள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Nov 30, 2024 15:31 IST
    சென்னையில் தொடரும் கனமழை: தி.நகர், வேளச்சேரி பகுதியில் வெள்ளம்

    சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய பகுதிகளான தி.நகர், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 15:27 IST
    வேகமாக நிரம்பி வரும் அடையாறு ஆறு: கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு அச்சம்!

    தொடர் மழை காரணமாக அடையாறு ஆறு வேகமாக நிரம்பி வரும் நிலையில்,ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு அச்சம் எழுந்துள்ளது.



  • Nov 30, 2024 15:08 IST
    சென்னையில் மின்சார ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தம்

    சென்னையில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால், பூங்கா ஸ்டேஷன் அருகே மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடற்ரை – தாம்பரம் மார்கமாக செல்லும் மின்சார ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • Nov 30, 2024 15:06 IST
    சென்னைக்கு 100கி.மீ தூரத்தில் ஃபீஞ்சல் புயல்: நகரும் வேகம் குறைந்ததாக தகவல்

    ஃபீஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு 100கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. ஆனால் கரையை நோக்கி நகரும் வேகம் மெதுவாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் புயல் நகரும் வேகம் 13.கிமீ தூரத்தில் இருந்து 10கி.மீட்டராக குறைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இடைவிடாத கனமழை நீடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Nov 30, 2024 15:03 IST
    சென்னையில் காலை முதல் பதிவான மழை நிலவரம்

    சென்னையில் காலை 8.30 மணி முதல் மீனம்பாக்கம் - 10.2 செ.மீ கொளப்பாக்கம் - 10.25 செ.மீ,  நுங்கம்பாக்கம் - 9.70 செ.மீ,  நந்தனம் - 8.20 செ.மீ, நகரின் பல இடங்களில் 7 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது



  • Nov 30, 2024 14:58 IST
    ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலை சூழ்ந்த மழைநீர்

    காஞ்சிபுரத்தில் தொடர் மழையால், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலின் மேல்தளத்தில் இருந்து விழும் நீரால் நுழைவாயில் மற்றும் கோவிலை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது.



  • Nov 30, 2024 14:53 IST
    சூறாவளி காற்றுடன் கனமழை: சென்னை விமான நிலையம் இரவு 7 மணி வரை மூடல்

    சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதால், சென்னை விமான நிலையம் இரவு 7 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.



  • Nov 30, 2024 14:49 IST
    ஃபீஞ்சல் புயல் காரணமாக ரயில்களுக்கு மாற்றுப்பதை அறிவிப்பு

    ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்லும் ரயில்களின் பாதை மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டள்ளது. சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீச் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. கோவையில் இருந்து வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 14:46 IST
    சென்னையில் 90.கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், இன்று 90கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. 



  • Nov 30, 2024 14:34 IST
    அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு 

    பெஞ்சல் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 30, 2024 14:31 IST
    8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Nov 30, 2024 14:28 IST
    சென்னைக்கு ரெட் அலர்ட் 

    சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  அடுத்த 3 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 14:10 IST
    வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் : பிரதீப் ஜான்

    வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது, நள்ளிரவில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். மரக்காணம் – மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2024 13:59 IST
    எண்ணூரில் மிக கனமழை 13 செ.மீ. மழைப் பதிவு

    சென்னை எண்ணூரில் சில மணி நேரங்களில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. சென்னை கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ.மழை பெய்துள்ளது. பொன்னேரி, மணலியில் தலா 8 செ.மீ., ஆலந்தூர், கொளத்தூர், துங்கம்பாக்கம், மாதவரம், புழலில் தலா 7 செ.மீ. மழைப் பதிவு ஆகியுள்ளது.

     



  • Nov 30, 2024 13:58 IST
    சென்னையில்  7 சுரங்கப்பாதைகள் மூடல் 

    சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கெங்கு ரெட்டி, ஆர்.பி.ஐ. அஜாக்ஸ், பெரம்பூர், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் டூ வீலர் பாதை, பழவந்தாங்கல் உள்ளிட்ட 7 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.



  • Nov 30, 2024 13:57 IST
    சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரெயில் சேவை ரத்து

    பலத்த காற்று வீசுவதால் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.30 நண்பகல் 12.15 மணி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Nov 30, 2024 13:56 IST
    ஃபீஞ்சல்  புயல் கரையை கடப்பதில் தாமதம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் 

    ஃபீஞ்சல்  புயல் இன்று மாலையில் கரையைக்கடக்கும் என்றும் மீண்டும் அறிவிப்பு வெளியான நிலையில், புயல் கரையைக் கடக்க நாளை அதிகாலை வரை தாமதமாகலாம். புயல் கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

     



rain Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment