சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
சென்னையில் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ள நிரை தடுக்க மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றங்கரையோரம் வெள்ளதடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தலைமை செயலாளர் சிவ்தாஸ் ஆய்வு செய்தார். பெருங்குடி, கெருகம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்கிறார்.
ரூ.24 கோடியில் இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மணப்பாக்கம் பகுதியில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் 15 இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேசுகையில்” சென்னை மாநகரில் மீதம் உள்ள 40 % மழை நீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும். 568 கிலோ மீட்டர் நீள மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு பெறும். திடீர் மழை பெய்தால் தயார் நிலையில் இருக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.