Advertisment

சென்னை கனமழை எதிரொலி: 11 சுரங்கங்கள் மூடல்; போக்குவரத்து மாற்றம் எங்கே?

ரெட்டேரி நிரம்பி நீர் வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வாயிலாக புழல்கால்வாயை அடைவதால் எம்.ஆர்.எச். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Rains, Chennai flood

Chennai rains 11 subways closed due to waterlog: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற காரணத்தால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நீர் தேங்கியுள்ள காரணத்தால் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

மூடப்பட்டுள்ள சுரங்கங்கள்

வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷ்புரம் சுரங்கப்பாதை, திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, கக்கன் சுரங்கப்பாதை.

போக்குவரத்து தடை

மழைநீர் தேங்கியுள்ள நிலையில் கீழ் கண்ட சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

கே.கே. நகர் - ராஜ மன்னார் சாலை

மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை

ஈ.வி.ஆர். சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை

செம்பியம் - ஜவஹர் நகர்

பெரவள்ளூர் - 70 அடி சாலை

புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு

வியாசர்பாடி - முல்லை நகர் பாலம்

போக்குவரத்து மாற்று ஏற்பாடு

மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச். சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீர் வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வாயிலாக புழல்கால்வாயை அடைவதால் எம்.ஆர்.எச். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரே பக்கமாக செல்கிறது.

குமணன் சாவடி குன்றத்தூர் ரோடு ஒரு புறம் மூடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment