சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை, வீடுகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். பலர் அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல பகுதிகளில் 6 அடிக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. மீட்பு நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகரில் இன்று (டிச.6) காலை 6 மணி நிலவரப்படி 13 சுரங்கப் பாதைளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் அங்கு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை, மெட்லி சுரங்கப் பாதை, என்.எஸ்.கே, ஜீவா நகர் சுரங்கப் பாதை, கெங்குரெட்டி சுரங்கப் பாதை, முரசொலி மாறன் சுரங்கப் பாதை, சி.பி ரோடு சுரங்கப் பாதை, துரைசாமி, அரங்கநாதன் சுரங்கப் பாதை, வில்லிவாக்கம், மாணிக்கம்பாக்கம் சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, எம்.1 பகுதி சுரங்கப் பாதை உள்பட 13 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது என பெரு நகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“