சென்னை வெள்ளம் : பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்தால் யார் உதவியை நாடுவது?
நீங்கள் கீழே இருக்கும் இருப்பிடங்கள் மற்றும் பகுதிகளில் வசித்து வரும் பட்சத்தில் அருகில் இருக்கும் பிரத்யேக பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கலாம்
சென்னையில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ள நீர் புகுந்துள்ளதால் ஏற்கனவே நோய்தொற்று அபாயம் அதிகம் உள்ள நிலையில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயமும் நிலவி வருகிறது.
Advertisment
உங்கள் வீடு அல்லது நீங்கள் குடியிருக்கும் பகுதியில் பாம்புகள் இருப்பதை நீங்கள் உறுதி செய்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள். அவர்களை நீங்கள் 044-22200335 என்ற எண்ணிலும், 9840648011 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவியை நாடலாம்.
தமிழக வனத்துறை மேலும், பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நீங்கள் கீழே இருக்கும் இருப்பிடங்கள் மற்றும் பகுதிகளில் வசித்து வரும் பட்சத்தில் அருகில் இருக்கும் பிரத்யேக பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கலாம்.
சதுப்புநிலங்கள் அதிகமாக இருக்கும் தென்சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பாம்புகள் நுழைவது மழைக்காலங்களில் இயல்பான ஒன்றாகிவிட்டது. நல்லபாம்பு, சாரை போன்ற பாம்புகளை பிடிக்க வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிபாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் நபர்கள் அதிகமாக உதவி மையங்களை நாடியுள்ளனர் என்று கூறியுள்ளது வனத்துறை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil