டெல்டா மாவட்டங்களில் கனமழை: 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
தஞ்சையில் சம்பா நடவு செய்யப்பட்ட 40 ஆயிரம் ஏக்கரும், நாகையில் 23 ஆயிரம் ஏக்கர் நிலமும், மயிலாடுதுறையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்திலும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
Crops submerged in Delta districts : டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளதாக் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறையினரிடம் நீரை வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Advertisment
மழை நிற்க கூடாது VS மழை நிற்கணும் – சென்னை மக்கள் கருத்து என்ன?
தஞ்சையில் சம்பா நடவு செய்யப்பட்ட 40 ஆயிரம் ஏக்கரும், நாகையில் 23 ஆயிரம் ஏக்கர் நிலமும், மயிலாடுதுறையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்திலும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டையில் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. அரியலூரில் சம்பா அறுவடைக்காக 10 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பருத்தி நடவு செய்யப்பட்ட 5 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் வருத்தம் அடைந்துள்ளனர். இ-சேவை மையங்கள் மூலம் தங்களின் பயிர்களை காப்பீடு செய்யும்மாறு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil