/tamil-ie/media/media_files/uploads/2020/05/image-21.jpg)
தமிழகத்தில் உம்பன் புயலின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் கனமான மழை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், தர்மபுரி , கிருஷ்ணகிரி , சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் கனமான மழையும், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
In a measure to effectively tackle Cyclone Amphan, HAM radio team has been deployed at 24 Parganas (South) in West Bengal. They have set up radio (amateur radio) communication centres in islands in Sunderbans and other coastal areas. pic.twitter.com/bxzsdnPfXL
— The Indian Express (@IndianExpress) May 18, 2020
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த உம்பன் அதி தீவிர புயல் வடதிசையில் நகர்ந்து இன்று 18 ஆம் தேதி காலை கடும் புயலாக (Extremely Severe Cyclone) வலுப்பெற்று, இன்று மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த உம்பன் தற்போது மிக கடும் புயலாக ( Super Cyclone) வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு - வட கிழக்கு திசையில் மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகரும். இது வரும்
20 ஆம் தேதி வலுவிழந்து தீவிர புயலாக மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும்.
இதன் காரணமாக,
18 ஆம் தேதி : மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 230-240 வரையிலும் இடையிடையே 265 கிலோமீட்டர் வரையிலும் வீசக் கூடும் .
19 ஆம் தேதி: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்
கடும் சூறாவளி காற்று மணிக்கு 200-210 கிலோமீட்டர் வரையிலும் இடையிடையே 230
வரையிலும் வீசக்கூடும் .
20 ஆம் தேதி: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில்
கடும் சூறாவளி காற்று மணிக்கு 180-190 கிலோமீட்டர் வரையிலும் இடையிடையே 210
கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும்.
இந்த காலகட்டங்களில் கடல் மிக சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுவதால், மீனவர்கள் 20 ஆம் தேதி வரையில் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் , மன்னர் வளைகுடா , குமரிக்கடல், லட்சத்தீவு , மாலத்தீவு , தென் கிழக்கு அரபிக்கடல்
பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
In a measure to effectively tackle Cyclone Amphan, HAM radio team has been deployed at 24 Parganas (South) in West Bengal. They have set up radio (amateur radio) communication centres in islands in Sunderbans and other coastal areas. pic.twitter.com/bxzsdnPfXL
— The Indian Express (@IndianExpress) May 18, 2020
அடுத்த 12 மணி நேரத்தில் இது கிட்டத்தட்ட வடக்குமுகமாக மெல்ல நகர்ந்து மீண்டும் வடக்கு வடமேற்குமுகமாகத் திரும்பி வங்காள விரிகுடாவில் வடமேற்கில் வேகமாக நகர்ந்து மேற்கு வங்கம் பங்களாதேஷ் கடற்கரைகளை, திகா (மேற்குவங்கம்) , ஹடியா தீவுகள் (பங்களாதேஷ்) ஆகியவற்றுக்கிடையே 20 மே 2020 அன்று மதியம் அல்லது மாலை மிக கடுமையான சூறாவளி புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உம்பன் தற்போது மிக கடும் புயலாக ( Super Cyclone) வலுப்பெற்றுள்ளதால், கொரோனா சிறப்பு ரயில்கள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு ஒடிசா முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.