/tamil-ie/media/media_files/uploads/2021/11/IMG20211126145032.jpg)
Janani Nagarajan
Chennai rains red alert given in coastal districts : வெள்ளிக்கிழமை முதல் இடைவிடாது பெய்த கனமழையால் சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு உண்டாகி வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக வந்த கனமழையினால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு உண்டாகி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.
கூடுவாஞ்சேரி மற்றும் ஆவடி உள்ளிட்ட தெற்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
தொடரும் பருவமழையினால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கின்ற வேளையில், பல சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழ்வான நிலப்பரப்பில் வாழும் மக்களின் இடங்களில் மண் போட்டு நிரப்புவது, மோட்டார் உபயோகித்து மழைநீரை அப்புரவுப்படுத்துவது, மழைநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்குவது போன்று பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தினாலும், தற்போது உருவாகின்ற மழையின் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பிற்கு குறைச்சல் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.