Advertisment

உணவு தட்டுப்பாடு, தெருக்களில் புகுந்த கழிவு நீர்- பரிதவிக்கும் சென்னை மக்கள்

வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டு வரும் நிலையில், பாரதி நகர், சிடிஓ காலனி, குட் வில் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் வசிப்பவர்கள், அரசின் கவனத்திற்கு வருமா என ஏங்குகின்றனர்.

author-image
WebDesk
New Update
Chennai floods

Chennai floods 2023

Janardhan Koushik

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தெருக்களில் புகுந்ததால், பலர் தவித்து வருகின்றனர்.

மழை நின்றுவிட்டது என்றாலும், வெள்ளம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கும் 200 அடி ரேடியல் சாலை மக்கள் அணுகமுடியாத நிலையில் உள்ளது. மக்கள் காமாக்ஷி மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், மேற்கொண்டு பயணிக்க முடிவதில்லை.

மருத்துவமனையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, தண்ணீர் வார்டுகளுக்குள் நுழையாமல் இருக்க அதை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேற்கு தாம்பரத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டு வரும் நிலையில், பாரதி நகர், சிடிஓ காலனி, குட் வில் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் வசிப்பவர்கள், அரசின் கவனத்திற்கு வருமா என ஏங்குகின்றனர்.

தண்ணீர் தேங்கி நிற்கும் தெருக்களில் சென்றால், குடியிருப்புகளுக்குள் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதை காண முடிகிறது. சிலர் வீடுகளை காலி செய்துள்ள நிலையில், இன்னும் சிலர் வெளியே வர முடியாமல் உதவிக்காக காத்திருக்கின்றனர்.

நெட்வொர்க் இணைப்பு இல்லாததால் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்த பணத்தில் ஒரு பாக்கெட் பால் வாங்க மேலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் குட் வில் நகரை சேர்ந்த நரேஷ் கூறுகையில், ’கடந்த 2015ம் ஆண்டு பெரம்பூரில் இருந்து இங்கு குடியேறினேன்.

ன் வீட்டில் 90 வயது பாட்டி இருக்கிறார். நாங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறோம். உடனடி மருத்துவ உதவியை வழங்க இங்கு அவசர மீட்புக் குழுக்கள் எதுவும் இல்லை.

Chennai floods

கூடுதல் பொருட்களை வைப்பதற்கு மேல் தளத்தில் ஒரு அறை உள்ளது, இப்போது நாங்கள் அனைவரும் அங்குதான் தஞ்சம் அடைந்துள்ளோம். இங்குள்ள எனது குடியிருப்பில் 46 குடும்பங்கள் சிரமப்படுகின்றனர்.

நகரத்தில் வெள்ளம் பாதித்த மற்ற பகுதிகளை போல அதிகாரிகள் எங்கள் பகுதிகளில் கவனம் செலுத்துவதில்லை. அதிக சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. சிலர் மட்டும் படகில் வந்து பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுத்தனர். ஆனால் அது உதவாது, என்றார்.

எல்சி (62) என்ற மூதாட்டி பேசுகையில், நான் பாரதி நகரில் தனியாக வசிக்கிறேன். எனது மகன் மும்பையில் இருக்கிறான்.  நான் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக குட் வில் நகரில் வீட்டை வாங்கினான்.

இப்போது முழு வீடும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. நான் என் உறவினர் அலுவலகத்தில் தங்கி இருக்கிறேன். வீட்டில் உள்ள விஷயங்களைப் பற்றி நினைத்தால் இன்னும் கவலையாக உள்ளது, என்றார்.

Chennai floods

மற்றொரு குடியிருப்புவாசி கூறுகையில், சில இடங்களில் தண்ணீரின் ஆழம் காரணமாக குழுக்கள் வழங்கும் பொருட்கள், பிஸ்கட் போன்றவை, தூரத்தில் இருந்து வீசப்படுகின்றன, பல பொருட்கள் தண்ணீரில் விழுந்ததால் வீணாகிவிட்டதாக கூறினார்.

சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. காலை முதல் மாலை வரை, எங்கள் குடும்பம் முழுவதும் பிஸ்கட் மற்றும் காலையில் கிடைக்கும் பாலில்தான் உயிர் வாழ்கிறோம். எங்களுக்கு கூடுதலாக ஒரு பாட்டில் தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை, என்கிறார் குட் வில் நகரை சேர்ந்த லலிதா (75).

2015 வெள்ளத்தின் போது சென்னையின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெரும்பாக்கத்தில், மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மூலம் படகுகள் மற்றும் லாரிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த பகுதியில் வசிப்பவர்கள் சிலர், மூன்று நாட்கள் உணவு, மின்சாரம் மற்றும் இணைப்பு இல்லாமல் உயிர் பிழைத்த பிறகு, புதன்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Chennai floods

திங்கட்கிழமைக்குப் பிறகு எங்களுக்கு உணவு தீர்ந்து விட்டது; அது பயங்கரமானது. ஏதாவது அதிசயம் நடக்கும், யாராவது எங்களை காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் அது நடக்க இரண்டு நாட்கள் ஆனது. எங்கள் குடியிருப்பில் 5,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் விரைவில் வெளியேற விரும்புகிறார்கள், அது ஒருவித மன அழுத்தமான காலகட்டமாக இருந்தது. நான் கிண்டிக்கு அருகிலுள்ள எனது நண்பரின் வீட்டிற்குச் செல்கிறேன், என்று எம்பஸி ரெசிடென்சியில் வசிக்கும் ஆர் அசோக் நாதன் கூறினார்.

புதன்கிழமை மாலை 5 மணியளவில், இருட்டில் இயக்க முடியாமல் படகு சேவைகள் நிறுத்தப்பட்டன, ஆனால் பெரும்பாலோர் மீட்கப்பட்டதாக தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

சிக்னல் அருகே மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது, மேலும் அவர்கள் மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு செல்லலாம் என்பது குறித்த விவரங்களை காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கினர்.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள குளோபல் மருத்துவமனையின் நோயாளிகள் அனைவரையும் மீட்கப்பட்டனர்.

சுமார் 20 தீவிர நோயாளிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் உடனடியாக மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். மற்ற மருத்துவமனைகளில் கூட எங்கள் மருத்துவர்களால் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம், என்று மருத்துவமனையின் பிரதிநிதி தெரிவித்தார்.

Read in English: Scarcity of food and abundance of filth hit several Chennai pockets amid aftereffects of Cyclone Michaung

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment