கனமழை எதிரொலி: மூடப்பட்ட ரயில்வே சுரங்கங்கள்; சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் எங்கே?
மழை நீர் பெருக்கு காரணமாக ஈ.வெ.ரா சாலையில், சென்ட்ரல் ரயில்வே சந்திப்பில் இருந்து நாயர் சந்திப்பு வரை செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கு திருப்பி விடப்படும் என்று அறிவித்துள்ளது.
Chennai Rains Several Railway subways closed : வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்ற காரணத்தால் மூன்று ரயில்வே சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.
Advertisment
ஈ.வெ.ரா. சாலை கங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப் பாதை மற்றும் கணேஷபுரம் சுரங்கப்பாதை தற்போது மூடப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நீர் பெருக்கு காரணமாக ஈ.வெ.ரா சாலையில், சென்ட்ரல் ரயில்வே சந்திப்பில் இருந்து நாயர் சந்திப்பு வரை செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கு திருப்பி விடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி மார்ஷல் சாலை வழியே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். அதே போன்று மார்ஷல் சாலையில் இருந்து பேந்தியன் ரவுன்டானாவை நோக்கியும் வாகனனங்கள் செல்ல அனுமதி உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil