மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரள, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 226 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூரில் 122 மி.மீ,, கள்ளக்குறிச்சியில் 156.மி.மீ, மழை பதிவாகி உள்ளது.

இதனிடையே, வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“