Chennai rains weather updates : தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்காக நகர்ந்து புதுவை - சென்னை அருகே இன்று காலை 03 - 04 மணிக்கு கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது
Advertisment
The Depression over southwest Bay of Bengal moved north-westwards and crossed north Tamilnadu & adjoining south Andhra Pradesh coasts between Puducherry & Chennai during 0300-0400 hrs IST of today, the 19th November 2021.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்படுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
22 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்தன
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த 22 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்தன. சென்னையில் இதுவரை 154 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தென்பெண்ணையாற்றில் வெள்ளம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையில் இருந்து 50955 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாலாற்றில் இருந்து 98 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள பாலாறு தடுப்பணை நிரம்பி வழிகிறது. மேலும் பாலாற்றில் இருந்து வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 98 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news