Advertisment

கிண்டி ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா- ஆளுனர் புரோகித் தன்னை தனிமைப் படுத்தினார்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
chennai guindy raj bhavan, raj bhavan 3 more persons tested covid-19 positive, governor banwarilal prohit himself in isolation

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களான காவலர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். அதே போல, இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 84 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் என்று ஆளுநர் மாளிகை செய்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த வாரம் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜ்பவனில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அந்த 3 பேரும் சுகாதாரத்துறையால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

நேற்று ராஜ்பவன் மருத்துவ அதிகாரி ஆளுநருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் ஆளுநர் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், மருத்துவர்களின் அறிவுரையின்படி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 7 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்” என்று குறிப்ப்பிட்டுள்ளது. மேலும், ராஜ்பவன் நிலவும் சூழலை நெருக்கமாக கண்காணித்து வருகிறது என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Governor Banwarilal Purohit Raj Bhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment