ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்க்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது சிறிது தூரம் சென்ற நிலையில் ரயில் பின்புறத்தில் இருந்த மூன்றாவது பெட்டி கழன்று சென்றதால், அதனுடன் இணைக்கப்பட்ட கார்டு உள்ளிட்ட இரண்டு பெட்டிகளும் தனித்து விடப்பட்டன. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய சிறிது நேரத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் இணைப்பிலிருந்து கழன்று சென்றது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர்.
ரயில் சிறிது நேரம் மற்ற பெட்டியுடன் சென்று கொண்டிருந்தது. தகவல் அறிந்து கார்டு கொடுத்த தகவலையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்ததையடுத்து, 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றுள்ளது.
இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பயணிகள் ஏராளமானோர் ரயில் பெட்டியில் இருந்து இறங்கி பெட்டியை இணைக்கும் வரை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இது குறித்து பயணிகள் தெரிவிக்கையில்; ரயில் வண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கிளம்பி சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால், வேகம் குறைவாக சென்ற ரயிலில் ஏற்பட்ட பிரச்சனை உடனடியாக கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது. அதே நேரம் ரயில் அதன் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பயணிகளுக்கு என்ன பாதுகாப்பு என கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக இந்த விபத்து குறித்து திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளர்கள் விசாரணை செய்து அறிக்கையினை தாம்பரம் பணிமனைக்கு சமர்ப்பித்து இருக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“