கடந்த 18,19 ஆகிய தேதிகளில், சென்னையில் பெய்த கனமழையால் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து மக்களுக்கு பயனளிக்கிறது.
மேலும், சென்னை செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து, 211 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 63% ஆக இருந்த நீர்நிலையின் சேமிப்பு செவ்வாய்க்கிழமை 69.41% ஆக உயர்ந்துள்ளது.
நீர்த்தேக்கம் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நல்ல வரத்து கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தவிர, ரெட் ஹில்ஸ் உட்பட மற்ற நான்கு நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவே நீர்வரத்து பெறப்பட்டுள்ளது.
மேலும், வட தமிழகத்தில் புதன்கிழமை (இன்று) பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil