ஸ்விகி, சொமேட்டோவில் காய்கறி, பழங்கள் – சென்னை வாசிகளை ‘சபாஷ்’ போட வைத்த சிஎம்டிஏ
இந்த வாடிக்கையாளர்களின் நலனுக்காக, சிஎம்டிஏ ஆரம்பத்தில் 50 வாகனங்களை இயக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. ரெஸ்பான்ஸ் பொறுத்து, வாகனங்களின் எண்ணிக்கை உயரும்
சென்னையில் வசிப்போர் இப்போது கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளையும் பழங்களையும் ஆர்டர் செய்து பெறலாம், ஸ்விக்கி, சொமேட்டோ மற்றும் டன்சோ போன்ற விநியோக சேவை பயன்பாடுகளின் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே இவற்றை பெறலாம்.
14 முதல் 16 காய்கறிகள் மற்றும் 5 பழங்களைக் கொண்ட ஒரு காம்போ பேக்கை ஆர்டர் செய்யலாம். கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவின் முடிவின்படி காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான அளவுகள் இருக்கும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் மொத்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார், சென்னை பெருநகர மேம்பாட்டு முகமை (சிஎம்டிஏ) இல் தினசரி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினார்.
http://www.cmdachennai.gov.in/ நீங்கள் இதனை தெரிந்து கொள்ளலாம்.
COVID-19 லாக் டவுன் காரணமாக பொருட்களைப் பெறுவது சிரமமாக இருக்கும் நகரவாசிகளுக்கு மொத்தம் 18 காய்கறிகள் மற்றும் 8 பழங்களை வழங்குவதற்கான யோசனையே இது.
மொத்தமாக வாங்குபவர்கள்
மொத்தமாக வாங்குபவர்களைப் பொறுத்தவரை, 25 குடும்பங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள், சிஎம்டிஏ வலைத்தளம் அல்லது தொலைபேசி எண் -730 5050 541, 730 5050 542, 730 5050 543, 730 5050 544, 902 5653 376 அல்லது 044- 24791133 க்கு அழைக்கலாம்.
இந்த வாடிக்கையாளர்களின் நலனுக்காக, சிஎம்டிஏ ஆரம்பத்தில் 50 வாகனங்களை இயக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. ரெஸ்பான்ஸ் பொறுத்து, வாகனங்களின் எண்ணிக்கை உயரும். மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காகவோ அல்லது சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினரும் நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கும் பகுதிகளுக்காக வாகனங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தின் பணிகளை மேற்பார்வையிடும் சிஎம்டிஏ உருவாக்கிய ஒரு ஏற்பாட்டால் வீட்டிற்கு வந்து விநியோகிக்கும் சேவை சாத்தியமானதாகிவிட்டது. “எங்களை தொந்தரவு செய்வது என்னவென்றால், காய்கறிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தைக்கு வருகிறார்கள். இந்த போக்கை நாங்கள் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. இதனால்தான் நாங்கள் இந்த ஏற்பாட்டைக் கொண்டு வந்துள்ளோம், ”என்று CMDA கீழ் வரும் HUD துறையின் அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil