திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று முதலே, மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் அனல்காற்று சுட்டெரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று ( மே 14ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
திருச்சி, தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். காற்றின் வேகம் 40 முதல் 50 கி,மீ.வேகத்தில் இருக்கும்.
அனல் காற்று எச்சரிக்கை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (15ம் தேதி) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மழைப்பதிவு
மே 15ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி, மழை பதிவான இடங்கள் ( செ.மீ.ல்)
சூளகிரி 6 செ.மீ
கோடநாடு 4 செ.மீ
நத்தம் 3 செ.மீ
பெரியநாயக்கன்பாளையம் , ஈரோடு, மணப்பாறை, கேத்தி 2 செ.மீ
நாங்குநேரி, கோத்தகிரி, திருப்பத்தூர், மற்றும் வாடிப்பட்டி 1 செ.மீ
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை - கடலின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும்.