/tamil-ie/media/media_files/uploads/2019/10/rto.jpg)
Chennai RTO Office, Chennai RTO Official advised, RTO Office, RTO Offical advised to driving licence applicants, சென்னை ஆர்.டி.ஓ அலுவலகம், ஆர்.டி.ஓ அதிகாரி அறிவுரை, ஒழுங்கான உடையில் வர அறிவுரை, men and women come in proper dress, RTO, Chennai, KK Nagar
RTO Official advised to Driving Licence applicants: ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிகள் இல்லாதபோது விண்ணப்பிக்கும் ஆண்களும் பெண்களும் முறையாக ஆடை அணிந்துவர வேண்டும் என்று மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அதிகாரி ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் “அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முறையாக ஆடை அணிந்துவர வேண்டும் என்பது பொதுவான அறிவுரை. இது காலாச்சார கண்காணிப்பு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
“பல்வேறு வகையான மக்கள் தினமும் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வருகிறார்கள். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் சரியான உடையில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். லுங்கி, ஷாட்ஸ் அணிகிற ஆண்கள் முறையான உடையில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு ஜீன்ஸ் பாண்ட் அணிந்து வந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிற ஒரு பெண்ணை, கே.கே.நகரில் உள்ள ஆ.டி.ஓ. அலுவலக அதிகாரி, வீட்டுக்கு சென்று சரியான ஆடை அணிந்துவருமாறு கூறியதாக செய்திகள் வெளியானது.
அதே போல, முக்கால் பாண்ட் அணிந்துவந்த மற்றொரு பெண்ணை அந்த அதிகாரி ஒழுங்கான ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதே போல, லுங்கி, ஷாட்ஸ், பெர்முடாஸ் அணிந்துவரும் ஆண்களை வீட்டுக்கு போய் ஒழுங்கான ஆடை அணிந்து வருமாறு கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் வழங்கும் அலுவலகமான ஆர்.டி.ஓ அலுவலகம் ஒரு அரசாங்க அலுவலகம். இங்கு வரும் மக்களை அவர்களுடைய அலுவலகத்திற்கு போகிறபோது ஒழுங்கான ஆடை அணிந்துவர வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஒரு ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தரப்பில் கேட்கின்றனர். அதோடு, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து பல்வேறு வகையான மக்கள் வருகிறார்கள் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று ஆர்.டி.ஓ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிகள் ஏதும் இல்லாதபோது விண்ணப்பிக்கும் ஆண்களும் பெண்களும் முறையாக முறையாக ஆடை அணிந்துவர வேண்டும் என்று ஒரு ஆர்.டி.ஓ அதிகாரி அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.