விவசாயிகளுடன் ஆலோசித்து 8 வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அவர் இருந்த பிரச்சார மேடையில் முதல்வர், பாமக தலைவர்கள் ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Chennai Salem Green-way Corridor  : சென்னையில் இருந்து சேலத்திற்கு மிக விரைவில் சாலை போக்குவரத்து மூலம் வந்தடைய 8 வழிச் சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சாலை பல்வேறு கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மீதும், காடுகள், மற்றும் வனவிலங்குகள் அதிகம் காணப்படும் வழியிலும் வர இருப்பதால் மிக அதிகமாக எதிர்ப்பு கிளம்பியது.

எட்டு வழிச்சாலை கொண்டுவரப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், மக்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கக வழங்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

பிரச்சாரத்தில் பேசிய நிதின் கட்கரி

வருவாய் ஆவணங்களில் செய்யபட்ட மாற்றங்களையும் 8 வாரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு அவர்கள் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் 08/04/2019 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததனர். இந்நிலையில் சேலத்தில் பிரச்சாரத்திற்காக வந்துள்ளார் பாஜக தலைவர் மற்றும் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. சேலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற இவர், நீதிமன்றமே தடுத்து நிறுத்தினாலும் 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

பிரச்சார உரையில் நிதின் கட்காரி பேசியது

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இந்த 8 வழிச்சாலை திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இருந்த பிரச்சார மேடையில் முதல்வர், பாமக தலைவர்கள் ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சென்னை – சேலம் 8 வழிச் சாலை ரத்து: விவசாயிகளிடம் நிலத்தை வழங்க ஐகோர்ட் உத்தரவு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close