16 இடங்கள்; 60 கலை நிகழ்ச்சி; 600 கலைஞர்கள்… தமிழக அரசு சார்பில் சென்னை சங்கமம் 13-ம் தேதி தொடக்கம்

“சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” என்ற தலைப்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நம்ம ஊரு திருவிழா (Express Photo)
நம்ம ஊரு திருவிழா (Express Photo)

தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி,வருகின்ற ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

“சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” என்ற தலைப்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 13ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சென்னை தீவுத் திடலில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சி, 16 இடங்களில், 60க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள், 600 மேற்பட்ட கலைஞர்களை கொண்டு, பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கிய தமிழக பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இத்துடன், தமிழ்நாட்டின் பல்வேறு வகையான உணவு பொருட்களைக் கொண்ட உணவுத் திருவிழாவும் இடம்பெறுகிறது.

மேலும், தமிழ் மக்களின் கதைகளை பேசி பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் இலக்கியத் திருவிழாவும் நடைபெறவிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai sangamam namma ooru thiruvizha inaugurate on jan 13 2023

Exit mobile version