சென்னையில், செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், அனிதா என்ற பள்ளி மாணவி ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த, மாணவி ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவியை மின்சாரம் தாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால், மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.