சென்னை கொரட்டூரில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் இருக்கும் குடிநீர் தொட்டியை மாணவர்கள் ஆபத்தான நிலையில் சுத்தம் செய்ய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கடந்த 7 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மழை நீர் வடிந்த நிலையில் சென்னையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தநிலையில், சென்னை கொரட்டூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தின் மீது உள்ள குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், மாணவர்கள் வாளியைக் கொண்டு குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். அவர்களுக்கு மேல் மின் வயர் ஒன்று செல்கிறது. மாணவர்கள் உயர் பயம் இல்லாமல், ஆபத்தான நிலையில் தொட்டியை சுத்தம் செய்து வருகின்றனர்.
அப்போது, இந்த வீடியோவை எடுத்தவர், மாணவர்களிடம் யார் இந்த வேலையைச் செய்யச் சொன்னது என கேட்க, தலையாசிரியர் தான் செய்யச் சொன்னார் மாணவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“