பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கு இந்த மாதம் மத்திய அரசிடம் இருந்து இடத்திற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.32,704.92 கோடியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலையம் 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த மாதத்தில் இடத்திற்கான அனுமதி கிடைக்கும். பின்னர், அடுத்த 6 மாதங்களில் பல்வேறு துறைகளில் இருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படும். ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து சர்வே எண்களையும் குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் குறித்த விவரங்களை வெளியிடுவோம்.
கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை விரைவுபடுத்துவதற்கு மாநில அரசு பெற வேண்டிய முதல் பெரிய ஒப்புதல் இடத்திற்கான அனுமதியாகும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி விண்ணப்பம் ஜனவரி 2023-ல், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் (டிட்கோ) அனுப்பப்பட்டது, அதன் பிறகு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டில் முன்மொழிவு குறித்து பல கேள்விகளை எழுப்பியது. அவர்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம், தற்போது எந்த பிரச்சனையும் இல்லை” என்று அதிகாரி மேலும் கூறினார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி பெற்ற பிறகு, திட்ட அனுமதிக்கு டிட்கோ விண்ணப்பிக்க வேண்டும். இது மிகவும் விரிவான செயல்முறையாக இருக்கும், மேலும் ஒப்புதல் பெற நேரம் எடுக்கும் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு அமைச்சகமும் கடந்த ஆண்டு டிசம்பரில் இடத்திற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“