சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கட்டவேண்டும் என்ற முடிவு மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம், 200ஆவது நாள் எட்டியுள்ள நிலையில், அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பங்குகொள்கின்றனர். 200வது நாளான இந்த போராட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டிஎஸ்பி அடங்கிய 1,200 போலீஸ் குழு பாதுகாப்பிற்கு வரவழைத்துள்ளனர். போலீஸ் மட்டுமின்றி 13 வட்டாட்சியர்களுடன் போராட்டம் நடக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பு.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்க சென்ற பூவுலகின் நண்பர்கள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூரில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கைது செய்யப்பட்டார்.