புதிய தொழில்கொள்கையில் இடம்பெற்ற சென்னை 2வது விமான நிலையம் திட்டம்

சென்னை 2வது விமான நிலையம் பற்றி முதல்வர் பழனிசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தொழில்துறை கொள்கையில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

chennai second airport project, chennai 2nd airport, chennai second airport, சென்னை, சென்னை இரண்டாவது விமான நிலையைம், முதல்வர் பழனிசாமி, kanchipuram, barndhur, cm edappadi palaniswami

சென்னையின் 2வது விமான நிலையம் திட்டம் எப்போது, எங்கே அமையும் என்று நீண்ட காலமாக நிச்சயமில்லாமல் இருந்து வந்த நிலையில், சென்னை 2வது விமான நிலையம் பற்றி முதல்வர் பழனிசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தொழில்துறை கொள்கையில் சூசகமாக தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையம் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று புதிய தொழிற்கொள்கை கூறுகிறது.

சென்னையின் 2வது விமான நிலையம் எங்கே அமைப்பது என்பதை இறுதி செய்ய தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்காக மாநில அரசு இன்னும் காத்திருக்கிறது என்பதால் இந்த அறிவிப்பு வந்திப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம், தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்ட பிறகு, காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைக்க அதிகாரிகள் இறுதி செய்ய வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சியான தமிழ்நாடு அரசு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்கும், சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதற்கும், ஏல நடவடிக்கையை நடத்துவதற்கும் ஆலோசகரை முடிவு செய்ய உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 தொழில்துரை பூங்காக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 20,000 தொழிலாளர்கள் தங்குவதற்கு இரண்டு தொழில்துறை வீட்டு வசதி அமைப்புகளை தமிழக அரசு உருவாக்கி வருவதாக தெரியவருகிறது. அந்த இடம் தொழிற்பூங்காவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai second airport project soon in near kanchipuram

Next Story
தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் டீசல் விலை : ஆர்பாட்டத்தை அறிவித்து திமுக அதிரடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com