சென்னை தாழம்பூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆர். நந்தினி என்ற பெண் சங்கிலியால் கட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் நண்பரான வெற்றிமாறன் என்ற திருநம்பி இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.
சென்னை தாழம்பூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆர். நந்தினி என்ற பெண் சங்கிலியால் கட்டப்பட்டு நெரித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் உடல் ஆழமான காயங்களுடன் பாதி கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் நந்தினியின் நண்பரான வெற்றிமாறன் என்ற திருநம்பி இருப்பது தெரியவந்தது.
மதுரையைச் சேர்ந்த நந்தினி திருநம்பி வெற்றிமாறனுடன் நட்பை முறித்துக்கொண்டு மற்றவர்களுடன் பேச ஆரம்பித்ததால், கோபமடைந்த திருநம்பி வெற்றிமாறன் நந்தினியைக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெற்றிமாறனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
சென்னை தாழம்பூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையான பெண் ஆர். நந்தினி, 25 என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுசேரி அடுத்த பொன்மார், வேதவிரி நகர் பகுதியில் டிசம்பர் 23-ம் தேதி இரவு, கைகள், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, உடலில் பிளேடால் ஆழமாக காயம் ஏற்படுத்தப்பட்டு, உடல் பாதி கருகிய நிலையில் ஒரு பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு தாழம்பூரில் இருந்து வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரதிருஷ்டவசமாக, அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில், முதற்கட்ட விசாரணையில் நந்தினி மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் இந்த கொலையில் சந்தேகிக்கப்பட்ட நபரைக் கண்காணித்ததில், இந்த கொலைக்குப் பின்னால் திருநங்கை ஒருவர் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், நந்தினியும், 26 வயதான பாண்டி மகேஸ்வரியும் மதுரையில் உள்ள ஒரே மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்ததாக தெரிவித்தனர். பின்னர், மகேஸ்வரி தனது பெயரை வெற்றிமாறன் என மாற்றிக்கொண்டார். நந்தினியும் வெற்றிமாறனும் கடந்த 8 மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து நண்பர்களாக பழகி வந்தனர்.
தொழில்நுட்ப ஊழியரான வெற்றிமாறனை நந்தினி காதலித்து வந்தார். இருப்பினும், அவர் அவர்களின் நட்பை முறித்துக்கொண்டு மற்றவர்களுடன் பேசத் தொடங்கியதால் கோபமடைந்த வெற்றிமாறன் நந்தினியைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலை வழக்கில், வெற்றிமாறனைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்து, இந்த கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“