பட்டுக்கோட்டை- அறந்தாங்கியை இணைக்கும் சென்னையின் சிறப்பு ரயில் | Indian Express Tamil

பட்டுக்கோட்டை- அறந்தாங்கியை இணைக்கும் சென்னை சிறப்பு ரயில்

Tamil Nadu News: நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழகத்திலுள்ள பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியை இணைக்கும் சென்னை ரயில் இயக்கத்திற்கு வருகிறது.

பட்டுக்கோட்டை- அறந்தாங்கியை இணைக்கும் சென்னை சிறப்பு ரயில்
இர்கான் இன்டர்நேஷனல் (இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்) பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 36 சதவீதமும், 6 மாதங்களில் 55 சதவீதமும் உயர்ந்துள்ளன.

Tamil Nadu News: நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழகத்திலுள்ள பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியை இணைக்கும் சென்னை ரயில் இயக்கத்திற்கு வருகிறது. இதனால் அவ்விடங்களிலிருந்து சென்னைக்கு பயணம் செய்யும் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

16 வருட காலத்திற்கு பிறகு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் சென்னைக்கு இணைக்கப்படும் ரயில் இயங்கவிருப்பது அங்கிருக்கும் மக்களுக்கு பல பயன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதை வழியாக, செகந்திராபாத் – சென்னை – ராமேஸ்வரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால், நீண்ட காலமாக சென்னைக்கு நேரடி சேவையை இழந்து தவித்தனர். இந்த சிறப்பு ரயிலினால் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மாநிலங்களுக்கு இடையேயான ரயில் ஆகஸ்ட் 24 அன்று செகந்திராபாத்தில் இருந்து இயக்கத் தொடங்கியது. இந்த ரயில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

காரைக்குடியிலிருந்து திருவாரூர் பி.ஜி பிரிவில் அறந்தாங்கி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு செல்லும் ரயில் சேவைகள் இந்த பாதையில் கேஜ் மாற்றும் பணிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

திருவாரூர் – காரைக்குடி இடையே சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு கேஜ் மாற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. முதலில் பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையிலும், அதன்பின் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக பட்டுக்கோட்டை வரையிலும் இருக்கும் பகுதிகளில் இப்பணி நடத்தப்பட்டது.

நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு முழுப் பணிகளும் முடிவடைந்த பின்னரும், கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், இந்தப் பாதையில் விரைவு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. 

திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு டீ.எ.ம்.யு. (டீசல் எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில் முதலில் கேட் கீப்பர்களுடன் இயக்கப்பட்டது. ரயில் பயணிகள், குறிப்பாக டெல்டா பகுதியின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ரயில் சேவையை கோரி வந்தனர். தற்போது இந்த சிறப்பு ரயிலின் அறிமுகத்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai special train introduced to connect pattukottai and arandhangi