காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நோக்கியா ஆலையில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நோக்கியா உற்பத்தி ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
Advertisment
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனினும், போதிய முன்னேற்பாடு நடவடிக்கை அடிப்படையில் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள், பொருளாதார மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அழைத்தது.
இதனையடுத்து, இரண்டு மாதகால பொது முடக்கத்திற்குப் பிறகு, இந்த மாத தொடக்கத்தில் மிகவும் குறைவான பணியாளர்களுடன் நோக்கியா ஆலை தனது உற்பத்தியைத் தொடங்கியது. இருப்பினும், இதில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அடுத்தது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொழிற்சாலை இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இதனிடையே, ஹூண்டாய் நிறுவனத்தில் பணிபுரியும் 21 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,"ஆலை நடவடிக்கைகள் தொடங்கிய முதல் வாரத்திலே,மூன்று ஊழியர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன.அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், மருத்துவ நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டது " என்று தெரிவிக்கப்பட்டது. சென்னை அருகிலுள்ள, இருங்கட்டுகொட்டை பகுதியில் அமைந்திருக்கும் உற்பத்தி ஆலையில், இந்த மாதம் மே 8 ஆம் தேதி தனது உற்பத்தியை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியது.