சென்னையில் பயங்கரம் : ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் மாணவர்கள் மோதலால் பரபரப்பு

Students clash in chennai : சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் மாணவர்கள் கத்தி மற்றும் கள்ளத்துப்பாக்கியுடன ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவிவருகிறது.

By: Published: February 5, 2020, 9:05:31 AM

Students clash in chennai : சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் மாணவர்கள் கத்தி மற்றும் கள்ளத்துப்பாக்கியுடன ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவிவருகிறது.

சென்னை புறநகர் பகுதியான பொத்தேரியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்களில் இருபிரிவினர் இடையே கேண்டீனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் மொபைல்போனில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பினர்.

போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை தேடும் பணியை அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.

ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.

மாநகர பஸ்சில் மாணவர்கள் மோதல் : மந்தைவெளி – பிராட்வே வழித்தடத்தில் இயங்கும் எண் 21 பஸ்சில், சென்ட்ரல் ஸ்டேசன் அருகே புதுக்கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம், பயணிகளிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பஸ்சின் ஜன்னல்கள், கண்ணாடிகள் சேதமடைந்தன. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் ஓடி தலைமறைவாகிவிட்டனர். சிசிடிவி வீடியோக்களின் அடிப்படையில் மாணவர்களை தேடிவருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai students clash srm university

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X