சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 4 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிப்பு என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை காஞ்சிபுரம்- கடற்கரை, கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை ரயில்கள் இயங்காது.
பராமரிப்பு பணி காரணமாக சுமார் 4 மணி நேரம் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் அத்தியாவசிய மற்றும் முக்கிய போக்குவரத்திற்காக புறநகர் ரயில்கள் பயன்படுத்தப்படுகிறது.
புறநகர் ரயில்களில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் என அன்றாடம் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“