மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் நேற்று முழுவதும் சென்னையில் கனமழை பெய்தது . இதனால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனிடையே நேற்றைய தினம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியது. சென்னை சென்ரல்- திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் மூழ்கியது.
இந்நிலையில் புறநகர் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், சூலூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை நீரை அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளார். சென்னை பொறுத்தவரை 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“