scorecardresearch

சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னையிலிருந்து புறநகருக்கு செல்லும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

chennai train timings
chennai train timings

சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் பொலிரெட்டிபாலம் யார்டில், கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதி, காலை 8.15 மணி முதல் 13.35 மணி வரை ஒரு சில எக்ஸ்பிரஸ் மற்றும் மெமு ரயில் சேவைகள் மாற்றப்படும்.

ரயில் எண் 12711, விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2  விஜயவாடா சந்திப்பில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில், கூடூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படும்.

ரயில் எண் 12712, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2ஆம் தேதி (இன்று) சென்னை சென்ட்ரலில் இருந்து 14:10 மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே ரத்து செய்யப்படும். இந்த ரயில் 16:20 மணிக்கு கூடூரில் இருந்து புறப்படும்.

நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ், நெல்லூரில் இருந்து காலை 10:15 மணிக்குப் புறப்படும். சூலூர்பேட்டை – நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், சூளுருப்பேட்டையில் இருந்து இரவு 07:45 மணிக்குப் புறப்படும்.

மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து மாலை 5:20 மணிக்கும், ஆவடி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மெமு உள்ளூர் ஆவடியில் இருந்து ஆகஸ்ட் 2 (இன்று) மாலை 04:25 மணிக்கு புறப்படுவதும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai suburban train southern railway chennai train timings