சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை பெரம்பூரில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிகக் குறைந்த கட்டணம் என்பதால், பல ஆயிரக் கணக்கான மக்கள் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் அலுவலக நேரங்களில் இயக்கப்படும் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும்.
இதனால், கூட்ட நெரிசலில் சிக்காமல் சௌகரியமாக பயணம் செய்ய ஏ.சி பெட்டிகளுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை பெரம்பூரில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புறநகர் ரயில் 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயிலாக தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட ரயில் என்பதால், காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு இந்த மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.