/tamil-ie/media/media_files/uploads/2021/01/prank-show.jpg)
பெசன்ட் நகர் கடற்கரையில் Prank show என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக பேச வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வந்த YouTube channel ன் உரிமையாளர்,தொகுப்பாளர் மற்றும் கேமராமேன் ஆகிய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Chennai Talk என்ற யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளர் அசன் பாதுஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், 'பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக பேச வைத்து வீடியோ பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றியும், கொரோனா ஊரடங்கு பற்றியும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, அந்த பெண் உற்சாகத்துடன் அளித்த சில பதில்கள் தற்போது கடும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.