Chennai News Highlights: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் கடும் அவதி

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
delhi

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் கடும் அவதி

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Oct 21, 2025 07:09 IST

    டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் அவதி

    தீபாவளி பண்டிகையான நேற்றும், நேற்று முன்தினமும் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.இது தலைநகரின் காற்று மாசுபாட்டு மீண்டும் அதிகரித்தது. தலைநகரில் உள்ள 38 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 31-ல் காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியிருந்தது கண்டறியப்பட்டது.காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு (ஏ.கியூ.ஐ), நண்பகலில் 334 ஆகவும் இருந்தது. அதேநேரம் ஆனந்த் விகார்(402), வாசிர்பூர்(423), அசோக் விகார்(414) ஆகிய 3 மையங்களில் மிகவும் மோசமான அளவை எட்டி இருந்தது. இது வரும் நாட்களில் மேலும் மோசமடையக்கூடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 20, 2025 22:08 IST

    ராமேஸ்வரம் - மண்டபம் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு இரத்து: மீன்வளத்துறை அறிவிப்பு

    ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்குவது மறு உத்தரவு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    இன்று (அக்டோபர் 19) முதல் கடலில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்புக் கருதி, நாளைய தினம் (அக்டோபர் 20) முதல் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்குவது நிறுத்தப்படுவதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 20, 2025 22:07 IST

    தீபாவளி: பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு; முக்கியச் சாலைகளில் கடும் புகைமூட்டம்

    தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு படிப்படியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் முக்கியச் சாலைகள் மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் பட்டாசுப் புகையின் காரணமாகக் கடும் புகைமூட்டம் காணப்பட்டது. இந்தப் புகைமூட்டம் சில இடங்களில் பார்வைத்திறனைக் (visibility) குறைக்கும் அளவுக்கு இருந்தது. பட்டாசுப் புகையால் காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு (PM 2.5 மற்றும் PM 10) அதிகரித்ததே காற்று மாசு உயர்வுக்குக் காரணமாகும். பொதுச் சுகாதாரத்தைப் பாதிக்கும் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



  • Oct 20, 2025 20:27 IST

    திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை; மக்கள் சாலை மறியல்

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த  பத்து நாட்களாக  சரியான குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அவர்கள் மறியலை கைவிடாததால் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞரை, இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார்  அடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Oct 20, 2025 18:28 IST

    ஒவ்வொரு தனிமனிதனையும் திருப்திப்படுத்த முடியாது -இயக்குநர் மாரி செல்வராஜ்

    ஒவ்வொரு தனிமனிதனையும் திருப்திப்படுத்த முடியாது. இந்த நாட்டின் குடிமகன் நான். என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதைகளை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதனை சாகும் வரை சொல்வேன். உங்கள் வாழ்க்கை வேறு. என் வாழ்க்கை வேறு. உங்கள் வாழ்க்கையை வைத்து, நீங்கள் என் வாழ்க்கையை பார்க்கக்கூடாது என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்



  • Oct 20, 2025 18:12 IST

    இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஷால்

    'மகுடம்' திரைப்படம் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘மகுடம்’ படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால் `மகுடம்' படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் 



  • Oct 20, 2025 18:06 IST

    தீபாவளிப் பண்டிகை; நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து அக்.22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து அக்.23 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.



  • Oct 20, 2025 18:06 IST

    தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.



  • Oct 20, 2025 16:35 IST

    வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்த நிலையில், சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடியது. 12 லட்சம் பேர் ரயிலிலும், சுமார் 7 லட்சம் பேர் பேருந்திலும் பயணித்தனர்.



  • Oct 20, 2025 16:33 IST

    அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 20, 2025 16:17 IST

    5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணையிலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 



  • Oct 20, 2025 15:43 IST

    நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

    நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளது. 



  • Oct 20, 2025 12:46 IST

    பீகார் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட லாலுபிரசாத்தின் ஆர்ஜேடி

    2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆர்ஜேடி. 243 தொகுதிகளில் 143 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் ஆர்ஜேடி. வைஷாலி - ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார். 



  • Oct 20, 2025 12:44 IST

    பிரம்மோஸ் என்ற பெயர் எதிரிகளை கவலையடையச் செய்கிறது- பிரதமர் பாராட்டு

    பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் திறனை நிரூபித்தது.  பிரம்மோஸ் என்ற பெயர் எதிரிகளை கவலையடையச் செய்கிறது. உலகில் பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்புகின்றன. இந்திய தரத்தில் உருவாக்கப்படும் ஆயுதங்கள் படைகளுக்கு பெரிய சக்தியை சேர்க்கிறது. பாதுகாப்புப் படைகள் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணம் செய்கிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • Oct 20, 2025 12:09 IST

    தீபாவளி - நாளை மறுநாள் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

     தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக நெல்லை - சென்னை எழும்பூர் இடையே வரும் 22 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி,நெல்லை - சென்னை இடையே வரும் 22, 23 ஆம் தேதிகளில் இருமார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னைக்கு காலை 10.55 மணிக்கு வந்தடையும். வரும் 23ஆம் தேதி சென்னையில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை சென்றடையும்.



  • Oct 20, 2025 12:07 IST

    இந்திய தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த்திற்கு பிரதமர் மோடி புகழாரம்

    ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் மட்டுமல்ல. இந்தியாவின் கடின உழைப்பு. விக்ராந்த் போர்க்கப்பல் தனித்துவமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் திறமை, திறன் மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்று என இந்திய தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த்திற்கு பிரதமர் மோடி புகழாரம்.



  • Oct 20, 2025 11:22 IST

    "சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும்"

    "செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விழுப்புரத்தில் மதியம் 1 மணி வரை மிதமான மழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, குமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருச்சி, தி.மலை மற்றும் வேலூரில் லேசான மழைக்கு வாய்ப்பு" உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 20, 2025 10:39 IST

    அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மக்களின் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது பற்றியும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.



  • Oct 20, 2025 10:38 IST

    இந்தியாவுக்கு வரிகள் கடுமையாக இருக்கும்: டிரம்ப்

    வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போவது இல்லை என்று அவர் கூறினார் என்றார்.



  • Oct 20, 2025 10:34 IST

    சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்த நிலையில், இடையிடையே கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு உள்பட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

     



  • Oct 20, 2025 10:33 IST

    நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி - ஒருவர் கைது

    திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரத்தில், வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆறுமுகத்தை கைது செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     



  • Oct 20, 2025 10:12 IST

    நாடு முழுவதும் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

    தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2026ல் பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் ரூ.400 கோடிக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டன.



  • Oct 20, 2025 10:12 IST

    கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல 2 நாட்கள் தடை

    கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி வனத்துறை தற்காலிக ஊழியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர். இதையொட்டி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் என 2 நாட்கள் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 22-ந்தேதி முதல் வழக்கம்போல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கொடைக்கானல் வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார்.



  • Oct 20, 2025 10:11 IST

    குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தொடரும் தடை

    தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவிகளின் தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.



  • Oct 20, 2025 10:10 IST

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது

    தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.95,360 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு ரூ.80 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை மாற்றம் இன்றி இருந்தது. தீபாவளி தினமான இன்று தங்கம் விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

     



  • Oct 20, 2025 10:05 IST

    பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் இன்னும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இன்று மட்டுமல்ல, கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆட்சியர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: