Chennai Tamil News: சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் முதலில் பீப் பிரியாணி ஸ்டால் சேர்க்கப்படவில்லை. இது பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில் மீண்டும் பீப் பிரியாணி ஸ்டால் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 3 நாள் உணவுத் திருவிழாவில், உணவு விற்பனையகம் வைக்கும் யாவரும் பீப் பிரியாணி வைக்க முன்வராததால் அவை வழங்கப்படவில்லை என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை உணவுத் திருவிழா துவக்கிவைத்தபின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது இவ்வாறு பதிலளித்தது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

150க்கும் மேற்பட்ட விற்பனையாகம் வைக்கப்பட்டிருக்கும் இந்த உணவு திருவிழாவில், சைவம் மற்றும் அசைவம் என பலவகையான உணவுகளை மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அவைகளில் சில உணவுகள் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு வகைகள் என்று கூறுகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவுடன் இணைந்து சுப்ரமணியன் துவக்கி வைத்த இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி சுகாதார விழிப்புணர்வு நடைப்பயணத்துடன் நிறைவடைகிறது.
“மூன்று நாள் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி கடை வேண்டுமென்றே அகற்றவில்லை. திறப்பு விழாவுக்குப் பிறகு, மாட்டிறைச்சி பிரியாணி வைக்க எந்த விற்பனையாகமும் முன்வராததால், இந்த உணவு தவிர்க்கப்பட்டது, ”என்று சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார்.
"யாராவது விருப்பம் தெரிவித்திருந்தால், நாங்கள் அவர்களை ஒரு ஸ்டால் அமைக்க அனுமதித்திருப்போம்," என்று அவர் மேலும் கூறினார். அவரின் பதிலுக்கு பின்பு சமூக வலைத்தளங்களில் பல எதிர்கருத்துக்கள் வர ஆரம்பித்தது.
இதைத்தொடர்ந்து, இன்று முதல் பீப் பிரியாணி உணவுத் திருவிழாவில் விற்பனையில் வைக்க முடிவெடுத்துள்ளனர். பீப் பிரியாணி வைக்க சுக்குபாய் பிரியாணி நிறுவனம் முன்வந்ததால், அவர்களுக்கு உணவு விற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil