scorecardresearch

எளிமையாகும் டிஜிலாக்கர்: புதிய அம்சங்கள் என்ன?

Chennai Tamil News: புதிய வசதிகளுடனும், புதிய கட்டுப்பாடுகளுடனும் மக்களுக்காக டிஜிலாக்கர் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எளிமையாகும் டிஜிலாக்கர்: புதிய அம்சங்கள் என்ன?
மக்களின் தேவையை எளிமையாக பூர்த்திசெய்யும் டிஜிலாக்கர்

Chennai Tamil News: இ-சேவையை மேம்படுத்துவதற்காக டிஜிலாக்கருடன் கூடுதல் சான்றிதழ்களை இணைக்கவேண்டும் என்று  சென்னை கார்ப்பரேஷன் கேட்டுக்கொள்கிறது.

இதில் வரி படிவங்கள், உரிமம் மற்றும் கட்டிட திட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) ஒரு மாதத்தில் இ-சேவைகளை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர், இதில் குடியிருப்பாளர்கள் டிஜிலாக்கர் மூலம் அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அணுகமுடியும் என்று கூறுகின்றனர்.

Digi Locker என்பது டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆன்லைன் சேவை ஆகும். https://digitallocker.gov.in/ என்ற இணையதளத்தில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.

தற்போது, ​​சென்னையில் வசிப்பவர்களுக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளன. 

பின்பு, குடியிருப்பாளர்கள் சொத்து வரி மதிப்பீட்டு ஆவணம், சொத்து வரி பெயர் பரிமாற்றத்தின் நகல், தொழில்முறை வரி மதிப்பீடு, நிறுவன வரி மதிப்பீடு, வர்த்தக உரிமம் புதுப்பித்தல் நகல், கட்டிடத் திட்ட ஒப்புதல் மற்றும் நிலத்தை பிரிப்பதற்கான திட்ட அனுமதி போன்ற பல்வேறு சான்றிதழ்களை டிஜிலாக்கர் மூலம் அணுகலாம்.

தற்போது, ​​கம்யூனிட்டி ஹால் ஆன்லைனில் இருப்பதை குடியிருப்பாளர்கள் பார்க்கலாம் ஆனால் முன்பதிவு ஆப்லைனில் மட்டுமே உள்ளது.

பெரும்பாலான மாநகராட்சி சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் உள்ளன. இணையதளத்தில் கூடுதல் தகவல்களுக்கு பொது அணுகலை வழங்க திட்டமிடுகின்றனர். பொது தகவல் போர்ட்டலில், பாதுகாப்பு நடவடிக்கைகளின் நேரம் மற்றும் பயணங்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர்.

பலர் தங்கள் பிரிவு எண்ணைப் பற்றிக் குழப்பமடைவதாக கூறியுள்ளனர். ‘உங்கள் பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற பிரிவில், வரைபடத்தைச் சரிபார்த்து, ஒருவர் எந்த மண்டலம் மற்றும் பிரிவில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவுகிறது.

ஒரு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகள், புதைகுழிகள், கம்யூனிட்டி ஹால் உள்ளிட்ட GCC வசதிகளை மக்களால் பார்க்கலாம். அருகில் இருக்கும் அம்மா உணவகங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவையும் தெரிந்துகொள்ளலாம்.

மக்களுக்கு GCC தொடர்பான பொது தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இணையதளத்தில் மக்களுக்கு கிடைக்கும்படி அமைத்துள்ளனர், மேலும் இதனை மேம்படுத்துவதற்கு செயல்படுகின்றனர்.

மேலும், மக்களின் சொத்து வரி அட்டை வழங்கினால் வங்கிகளுடன் இணைத்துக்கொடுப்பார்கள். இவர்கள் அளிக்கும் கார்டில் சொத்து அடையாள ஐடி மற்றும் முகவரி போன்ற அடிப்படை விவரங்கள் இருக்கும். 

இத்தோடு கார்டில் QR குறியீடு மற்றும் விர்ச்சுவல் பேமெண்ட் ஐடி பொருத்தப்பட்டிருக்கும், இதனை வைத்து ஸ்கேன் செய்வது GCC வலைப்பக்கத்தைத் திறந்தால், வரி செலுத்துவதற்கான ஒருவரின் தற்போதைய நிலுவைத் தொகையைக் காண்பிக்கும். இவ்வசதியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai tamil news digilocker is available with new rules and updates