Advertisment

ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த கலைஞர் மாரத்தான்!

கலைஞர் நினைவு நாளன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) நடத்தப்பட்ட மாரத்தான் நிகழ்ச்சி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது.

author-image
WebDesk
Aug 08, 2022 12:06 IST
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த கலைஞர் மாரத்தான்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள்

Chennai Tamil News: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் 43,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களால் நிகழ்த்தப்பட்ட இந்த மிகப்பெரிய நினைவு மாரத்தான் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Advertisment

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், கலைஞர் நினைவு நாள் அன்று நடைபெற்ற சர்வதேச மாரத்தான் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் 5 கிலோமீட்டர் மாரத்தானையும், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு 10 கிலோமீட்டர் மாரத்தானையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

21 கிமீ மற்றும் 42 கிமீ தூரத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வி.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.வி.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் நினைவு நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நலம் மற்றும் மருத்துவமனைக்கு 1.2 கோடி ரூபாய் வழங்கினார். மேலும், மாரத்தானில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் 12 இடங்களில் காலை உணவு மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டன.

நான்கு பிரிவாக நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் நான்கு பேர் வெற்றிபெற்றனர். மணிசரண் என்பவர் 5 கிமீ பிரிவில் முதல் பரிசை வென்றார், 10 கிமீ பிரிவில் கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் முதல் பரிசை வென்றார். 21 கிமீ பிரிவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமண கோவிந்த் முதல் பரிசையும், 42 கிமீ பிரிவில் ஜெய்ப்பூர் ஷேர்சிங் காவல் துறையினர் முதல் பரிசையும் பெற்றனர்.

இதையடுத்து, சைதாப்பேட்டையில் கருணாநிதியின் வெண்கலச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரி மற்றும் தூத்துக்குடி எம்.பி.ஆன கனிமொழியின் வீட்டிற்குச் சென்று அவரது இல்லத்தில் உள்ள தந்தையின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #M Karunanidhi #Marathon #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment