Advertisment

Chennai News Highlights: மன்மோகன் சிங்-க்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் - செல்வப்பெருந்தகை

இன்றைய தினத்தின் முக்கிய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Economist RBI Governor Finance Minister PM Manmohan Singh Tamil News

மன்மோகன் சிங் மரணம்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தகவலளித்துள்ளார்.

Advertisment

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.48-க்கும், சி.என்.ஜி எரிபொருள் விலை ஒரு கிலோகிராம் ரூ. 90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Dec 27, 2024 23:47 IST
    7 மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில், இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 27, 2024 23:45 IST
    சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி மரணம்

    எளிய மக்கள் பயன்பெரும் வகையில், மாருதி 800 வகை காரை அறிமுகம் செய்து, ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்திய சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி 94 வயதில் மரணமடைந்தார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 27, 2024 21:18 IST
    சூரியனுக்கு மிக அருகில் சென்று புதிய வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்: நாசா தகவல்

    நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற ஆளில்லா விண்கலம், சூரியனுக்கு மிக அருகில் சென்று புதிய வரலாறு படைத்துள்ளது. சூரியனுக்கு மேற்பரப்பில், 6.1 மில்லியன் கி.மீ தூரத்தை, கடந்த பார்க்கர் விண்கலம், பாதுகாப்பாக இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை விண்கலத்தில் இருந்து தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Dec 27, 2024 21:14 IST
    உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

    மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.



  • Dec 27, 2024 19:41 IST
    அண்ணா பல்கலை. விவகாரம் - நீதிபதிகள் கேள்வி 

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா? என்று, சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.



  • Dec 27, 2024 19:31 IST
    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம்: கீதா ஜீவன்

    அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.



  • Dec 27, 2024 18:44 IST
    சென்னை மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து விழுந்து ஒருவர் காயம், 3 கார்கள் சேதம்

    மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 3 மாடி வணிக வளாக கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென ராட்சத சாரம் பயங்கர சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. சாரம் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார். 3 கார்கள் சேதம் அடைந்தன. அஜாக்கிரதையாக சாரம் கட்டி பணியில் ஈடுபட்ட காண்ட்ராக்டர், கட்டட உரிமையாளரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Dec 27, 2024 18:29 IST
    விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? ஐகோர்ட் கேள்வி

    மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புலன் விசாரணை அதிகாரி, காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார்? கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புகாரில் ஞானசேகரன் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் காவல் ஆணையர் கூறினார். கைதான ஞானசேகரன் ஆளுங்கட்சி நிர்வாகி அல்ல என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். 

    உடனடி கைது நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டாமல் 3வது நாள் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என தலைமை வழக்கறிஞர் கூறிய நிலையில், குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் காவல் ஆணையர் அரசு அனுமதியை பெற்றாரா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்



  • Dec 27, 2024 17:53 IST
    வேலூரில் மின்சாரம் தாக்கி 2 பேர் மரணம்

    வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த மேல்வல்லம் என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மொட்டை மாடியின் முன்பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பணியின் போது இரும்பு தடுப்பு, அங்கே சென்ற மின்சார கம்பியில் உரசியதால் முகேஷ் (24), சதீஷ் (24) இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  



  • Dec 27, 2024 17:18 IST
    மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் – இ.பி.எஸ்

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது அனைத்து மாணவர்களின் கனவு. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஞானசேகரன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் சார் என பேசி உள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை இது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவியில் 56 தான் வேலை செய்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் எப்படி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார். ஞானசேகரனை 23 ஆம் தேதி விசாரித்துவிட்டு அனுப்பியது ஏன்? அன்றே அவரை எதற்காக கைது செய்யவில்லை? மாணவி கல்லூரி குழுவிடம் புகார் அளித்ததாக காவல் ஆணையர் சொல்கிறார், அமைச்சர் புகார் அளிக்கவில்லை என சொல்கிறார். அமைச்சர் மற்றும் காவல் ஆணையரின் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காப்பாற்ற முயற்சியா? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்



  • Dec 27, 2024 17:15 IST
    அண்ணா பல்கலை. மாணவி, 100க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார் – அமைச்சர் விளக்கம்

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, 100க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரிக்க வந்த போலீசாரிடம், POSH குழு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். காவல்துறை பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தெரியவந்தது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். நான் தெரிவித்தது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்



  • Dec 27, 2024 16:16 IST
    "சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்

    "அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. வழக்கு குறித்து உயர்கல்வி அமைச்சர் பேசியதற்கும், காவல்துறை ஆணையர் பேசியதற்கும் முரண்பாடு - அண்ணாமலை. காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று சென்னை காவல் ஆணையர் கூறுகிறார். சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 14:57 IST
    குமரி ரயிலில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா 

    கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் த்ப்ரூகர் செல்லும் விரைவு ரயிலில் வழக்கம் போல போலீசார் சோதனை செய்யும் போது ஒரு பெட்டியின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கஞ்சாவை கொண்டு வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Dec 27, 2024 14:55 IST
    அண்ணா பல்கலை. சம்பவத்தில் அரசியல் செய்கிறார்கள் - ஆர்.எஸ்.பாரதி

    "அண்ணா பல்கலை. யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பதை எதிர்கட்சிகள் தெரிந்து கொள்வது அவசியம். துணைவேந்தர் அனுமதியின்றி அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் யாரும் நுழைய முடியாது"

    சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளியை தமிழக காவல்துறை கைது செய்தது. பல்கலை. வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க முடியும். அண்ணா பல்கலை. சம்பவத்தில் அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது

    திமுகவை வீழ்த்தும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்பது காலம் முழுவதும் அண்ணாமலையால் செருப்பு அணிய முடியாத சூழலை ஏற்படுத்தும். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது வேடிக்கையானது.  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் செயலை பகுத்தறிவாதிகள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று ஆர்.எஸ்.பாரதி  கூறியுள்ளார். 



  • Dec 27, 2024 14:54 IST
    எச்.ராஜா தண்டனை நிறுத்தம் 

    பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான அவதூறு கருத்து ஆகிய இரு வழக்குகளில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 

    இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். 



  • Dec 27, 2024 14:54 IST
    வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள  பக்கத்தில், "பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100: தமிழகத்தில்  கரும்பு விலை ரூ.3150-டன்னுக்கு ரூ.950 குறைத்து   வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா?

    பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்பு  ரூ.4100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன் மூலம்  இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலை வழங்கும் மாநிலம் என்ற  பெருமையை பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உழவர்கள் நலனில் அக்கறை கொண்டு கரும்பு விலையை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது.

    ஆனால், தமிழ்நாட்டில் நடப்புப்பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை ரூ.3150 மட்டும் தான். இது மத்திய அரசு அறிவித்த விலை தான். தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு டன்னுக்கு  ரூ.215  ஊக்கத்தொகை  வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஊக்கத்தொகை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.  அதனால் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ.950 குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விவசாயிக்கும்  ரூ.38,000 இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

    2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று  மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சாப்  கரும்பு  10% சர்க்கரைத் திறன் கொண்டது  என்பதால் அதற்கு  மத்திய அரசின் விலை  ரூ.3400,  மாநில அரசின் ஊக்கத்தொகை  ரூ.710 ஆகும்.  தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும். 

    கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு  விலை நிர்ணயிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுவது தான் பஞ்சாபில் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க காரணம் ஆகும்.  மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகளே வழங்கி விடும் என்பதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை; அதே நேரத்தில்  உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

    தமிழ்நாட்டிலும் 2017-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறை தான் இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது தான் அந்த முறை கைவிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை  அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு  ரூ.650 ஊக்கதொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதே முறை நீடித்திருந்தால் ஊக்கத்தொகை இப்போது ரூ.1000 ஆக உயர்ந்திருக்கும். அதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4150 கிடைத்திருக்கும்.  ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அதை செயல்படுத்தத்  தவறியதால் தான் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது.

     குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது.  மாறாக, ஊக்கத்தொகை  முழுவதையும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசுக்கு  மிச்சமாகும். ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக செலவு  ஏற்படும் என்பதால்  அதைத் தாங்கி கொள்ள முடியாது என்பதால் அந்த முறையை செயல்படுத்த  திமுக அரசு மறுக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Dec 27, 2024 13:25 IST
     'சாட்டையால் அடித்துக் கொள்வது வேடிக்கையானது' - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

    "பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்வது வேடிக்கையானது, பகுத்தறிவாதிகள் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்." என்று அண்ணாமலையின் கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். 



  • Dec 27, 2024 12:42 IST
    சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

    2022ம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண், ரயில் முன்பு தள்ளி விடப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

    சதீஷுக்கான தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார். 



  • Dec 27, 2024 11:38 IST
    உயர்கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை 

    அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  உயர்கல்வி நிலையங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.  உயர்கல்வித் துறை செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ், அண்ணா பல்கலை. பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.  கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா கட்டிடக்கலை கல்லூரி ஆகிய முதல்வர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.  



  • Dec 27, 2024 11:23 IST
    தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. 

    சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் கடிதம் அளித்த கடிதம் அளித்த நிலையில் நீதிமன்றம் ஏற்றது. 

    நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் இன்றே இதனை விசாரிக்கிறது. 



  • Dec 27, 2024 10:09 IST
    ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் விவகாரம் - ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நுழைந்து பிரச்னை செய்த RSS மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    உருவ பொம்மையில் ‘திமுக அரசு’ என எழுதி, அதற்கு ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் எனக்கூறி மருத்துமனையில் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். 

    நோயாளிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என அங்கு பணியில் இருந்த காவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Dec 27, 2024 09:43 IST
    கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் உபரி நீர் - வெள்ள அபாய எச்சரிக்கை

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு மீண்டும் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. 

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும் மழையால் ஏரிக்கு நீர் வருகையால், தற்போது 96.5% நீர் இருப்பு உள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Dec 27, 2024 09:42 IST
    சிறுவன் தாக்கியதில் பீகார் இளைஞர் பலி

    சென்னை எழும்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தாக்கியதில் அதே மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ராகுல் குமார் என்பவர் உயிரிழந்தார்.

    அப்பகுதியில் உள்ள வீட்டில் இருவரும் வேலை செய்து வந்த நிலையில், ராகுல் குமாரை அச்சிறுவன், உடற்பயிற்சி செய்யும் தம்பிள்ஸ் கொண்டு தாக்கிக் கொலை செய்துள்ளார்

    வேலை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக சிறுவன் போலீசாரிடம் வாக்குமூலம். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 



  • Dec 27, 2024 07:06 IST
    அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் ரத்து

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க இன்று அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tamil News Update Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment