Advertisment

செங்கல்பட்டு: 500 ஏக்கரில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி; என்னென்ன வசதிகள் இடம்பெறும்?

TamilNadu Govt proposed to build 'Mega Sports City' in Chengalpattu, between ECR and OMR roads Tamil News: செங்கல்பட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி, 20க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்களை கொண்ட ஒரு முழுமையான நகரமாக அமைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Tamil News: tn govt to 'Mega Sports City' in Chengalpattu 500 acres

mega sports city chennai Tamil News:  சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியை' (விளையாட்டு நகரம்) அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைப்பதற்கான ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.

Advertisment

இந்த மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நீச்சல் வளாகம், சைக்கிள் பந்தய தடம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம், பல்நோக்கு உள்ளரங்கு மற்றும் கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்கான விளையாட்டரங்கு என மொத்தம் 20க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்களை கொண்ட ஒரு முழுமையான நகரமாக அமைக்கப்பட உள்ளது.

இவற்றுடன், தங்குமிடம், பணியாளர் குடியிருப்பு, உணவகங்கள், ஜிம் என்று பல்வேறு வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. தற்போது இதற்கு தேவையான சாத்தியக்கூறுகளை ஆராயவும், டெண்டர் மூலம் நிபுணர் குழுவை ஒப்பந்தம் செய்யவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு (ஓஎம்ஆர்) இடையே சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் திருவிடந்தைக்கு அருகில் அமையவுள்ள இந்த நகரத்திற்கான அனைத்து ஒப்புதலும் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் அமையவிருக்கும் முதல் விளையாட்டு நகரமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், சென்னைக்கு அருகில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு நகரம் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றும், தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை இது உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Tn Government Tamilnadu Government Tamilnadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment