வருகிறது சென்னை தினம்: குறும்பட போட்டிக்கு ரெடியா?

Chennai Tamil News: சென்னை தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மக்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

வருகிறது சென்னை தினம்: குறும்பட போட்டிக்கு ரெடியா?
பெருநகர சென்னை நகராட்சி (@chennaicorp/ Greater Chennai Corporation)

Chennai Tamil News: சென்னை தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மக்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

1639ஆம் ஆண்டு உருவான மதராசபட்டினம், தற்போது நம்முடைய சிங்கார சென்னையாக மாறி பல்வேறு பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. இப்படி, பல மக்களின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை கொடுக்கும் ‘வந்தாரை வாழவைக்கும் நம் சென்னை’யின் தினம் ஆகஸ்ட் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது.

இத்தினத்தை மக்களுடன் கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி ஓர் புதிய முயற்சியை ஒருங்கிணைத்துள்ளது.

சென்னைக்கு வரும் மக்களின் வாழ்வை பல்வேறு விதத்தில் மேன்மையடைய வைத்த இந்த ஊரிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை (ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை) அழகுப்படுத்தி மறுவடிவமைப்பு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விருப்பப்பட்டோர் முன்வந்து தங்களின் திட்ட வடிவமைப்புகளை தயார் செய்து பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், சென்னை மக்களுக்காக ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி, மற்றும் குறும்பட போட்டி ஆகியவை பெருநகர சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது.

ஓவியப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தேசியக் கொடியை தலைப்பாக வைத்து தங்களின் திறமையை வெளிகொண்டுவரலாம்.

சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதே தலைப்பு சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ரீல்ஸிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

குறும்பட போட்டியில் பங்குபெறுபவர்கள் ‘சென்னை’ என்ற தலைப்பில் தங்களின் குறும்படத்தை அனுப்பலாம்.

சிறந்த படைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களிலும், சென்னை தின வலைத்தளத்திலும் வெளியிடப்படும். மேலும், சிறந்த படைப்பாளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். 

இந்தாண்டு வரும் ‘சென்னை தினத்தை’ அனைவருடன் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக, மறக்கமுடியாதவாறு நிகழ்த்த வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கவனமாகத் திட்டமிடுகின்றன.

போட்டிக்கான இதர விவரங்களை மற்றும் பங்கேற்பாளர்களின் உள்ளீடுகளை shorturl.at/dLU89 என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யலாம்.

இப்போட்டிகளைப் பற்றின அறிவிப்புகள் மற்றும் மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள, GCC Twitter, Instagram, 

 மற்றும் Facebook சமூக வலைத்தளங்களில் (@chennaicorp/Greater Chennai Corporation) பின்தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai tamil news various contest are yet to conduct by chennai corporation