Subhasri death : நேற்று முதல் ஒட்டு மொத்த தமிழகமும் சுபஸ்ரீக்காக தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்து வருகிறது. அவரின் இறப்புக்கு காரணமான பேனர் கலாசாரத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது இணையத்தில் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இணையவாசிகள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது குமுறல்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்லத்திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு சாலையின் நடுவே வைத்திருந்த பேனர் தான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்த சம்பவம் ஆளும் கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள், இணையவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அனுமதியின்றி வைத்த பேனருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த சில மணி நேரத்திலேயே சுபஸ்ரீ மீதி லாரி ஏற்றிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பேனர் வைத்த ஜெயகோபால் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சர்ச்சை வெடித்தது.
கொடுமையான சம்பவத்தில் லாரி டிரைவரை கைது செய்த போலீஸ், பேனர் வைத்தவரை ஏன் கைது செய்யவில்லை? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். பேனர் கலாச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வரவேண்டும் என்றும், இனியொரு உயிர் பேனரால் பலியாக கூடாது என்றும் சமூக நல ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
#WhoKilledShubashree என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகியது. இந்த ஹாஷ்டேக்கின் கீழ் நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துக்கள்.
I think this has to start with the people who put up huge hoardings for Gym membership, birthday party, weddings, etc.. politicians don't care. This problem is not new. Should see how the roads and footpaths are covered between Chennai Trade Centre and Porur. #WhoKilledSubhasree
— Vishvaroop Patra (@vishvaroop) September 12, 2019
When Raghu was killed, this was painted in the road in cbe and was erased. It didn't make any change. Now rather than trending #WhoKilledShubashree in twitter, what will happen if #WhoKilledShubashree trends in real world. Walls,roads, buildings, posters need not be plain anymore pic.twitter.com/CwW7CgMUNp
— vignesh viswanathan (@vignesh7986) September 12, 2019
#WhoKilledSubhasri All the political parties and fan clubs of actors are equally responsible for illegal banners and hoardings. The Madras High Court's order is clearly disrespected by the authorities indicating rule of law is only in paper
— Bharath (@RaghavBharath) September 12, 2019
Dear Politicians, find a better way to show gratitude to your leaders not by killing us, it could be your daughter/son tomorrow.
Requesting Honorable #MadrasHighCourt take serious actions and ensure the innocents safety on road. #WhoKilledSubhasree https://t.co/fBEOSvte01— Anandan Shanmugam (@anandanrs) September 12, 2019
A 23 yr old girl crushed to death because of illegal banners erected by a #ADMK functionary in Pallikaranai, Chennai.
Subhasree, a BTech student lost her balance as the banner erected by a ADMK functionary for his family function fall on her and a lorry ran over. pic.twitter.com/O08oovaoWN— Mugilan Chandrakumar (@Mugilan__C) September 12, 2019
To all arivujeevis who are discussing if subhasree was wearing a helmet at the time of the incident, wear a helmet, and let someone throw a heavy object on you while you are driving, go under a lorry and apdiye poidu. Because you will also die. #WhoKilledShubashree
— Shanjana Vakeeswaran (@shanjvakee) September 12, 2019
இதற்கிடையில் சுபஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், பேனர் வைத்த ஜெயகோபால் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயகோபால் அனுமதியின்றி பேனர் வைத்ததாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேனர் அடித்துக்கொடுத்த எஸ்.கொளத்தூரில் உள்ள சண்முகம் கிராபிக்ஸ் எனும் பேனர் கடைக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சுபஸ்ரீயின் இறப்பு மொத்த தமிழகத்தையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. 23 வயதான சுபஸ்ரீ கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது தான் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது மற்றொரு சோகம். ஒரே ஒரு பேனர் அவரின் மொத்த வாழ்க்கையும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அவரின் குடும்பம் எதிர்பார்த்திருக்காது.