Advertisment

75 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட வெப்பமா? சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

ஜூன் 3, 1948 பிறகு, சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதம் சென்னையில் வெப்பநிலை 43.3 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

author-image
WebDesk
Jun 03, 2023 15:59 IST
tamil nadu weather

நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையின் பகல் வெப்பநிலையில் அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 42.4 டிகிரி செல்சியஸுடன் மாநிலத்திலேயே அதிக வெப்பமாக பகுதி என்று கூறப்படுகிறது.

Advertisment

ஜூன் 3, 1948 பிறகு, சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதம் சென்னையில் வெப்பநிலை 43.3 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் வலுவடைந்து வருவதாலும், கடல் காற்று தாமதமாக வருவதாலும் வெப்பநிலை உயர்வடைந்துள்ளது என்கின்றனர். அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னையில் வறண்ட மற்றும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, சென்னையின் பல உள் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வில்லிவாக்கம் 42.6, மாதவரம் 42.1, புழல் 42, கிண்டி 41.7, தாம்பரம் 41.6, தரமணி 41.2, நந்தனம் 40.5, எம்ஆர்சி நகர் 40.3 மற்றும் பள்ளிக்கரணையில் 40.1 பதிவாகியுள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் தென்கிழக்கு அரேபியக் கடலில் தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளது, இது அட்சரேகையில் நகரும்போது வங்காள விரிகுடாவிலிருந்து காற்றை இழுக்கக்கூடும் என்று ஸ்கைமெட் வானிலையின் தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் கூறினார்.

"இந்த தாழ்வுநிலை வங்காள விரிகுடாவில் இருந்து காற்றை இழுக்கும்போது, ​​காற்று நிலத்தின் மீது நகரும். இது வெப்பநிலையைக் குறைக்கும், ஆனால் ஈரப்பதம் உயரக்கூடும்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Weather Forecast Report #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment