Advertisment

வெள்ள நீர் அகற்றம்; 3 நாட்களுக்குப் பின் சென்னை- தூத்துக்குடி இடையே விமான சேவை தொடக்கம்

கனமழை வெள்ளத்தால் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை- தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

author-image
WebDesk
New Update
TN govt approved land acquisition for Parandur Airport Tamil News

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. 6 அடி அளவிற்கு வெள்ள நீர் தேங்கியது. 

Advertisment

கனமழையால்  தூத்துக்குடி விமான நிலையத்திலும் மழை நீர்  தேங்கியது. ஓடுபாதை சுற்றிலும் மழை நீர் தேங்கியது. இதனால்  தூத்துக்குடியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில், தூத்துக்குடியில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ள நீர் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 3 நாட்களுக்குப் பிறகு இன்று (டிச.20) முதல் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு விமானம் புறப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment