/indian-express-tamil/media/media_files/Dbn9xNDTijiAFt1FzAJ6.jpg)
3 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு
சென்னையில் 9 வயது சிறுவனை பயன்படுத்தி 3 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Unknown man booked in Chennai for sexually abusing 3 school girls on multiple occasions by using 9-year-old boy
இதில் பாதிகப்பட்ட அனைத்து சிறுமிகளும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று சென்னை போலீசார் தெரிவித்தனர். போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சிறார் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் அளித்துள்ள அறிக்கையில், “மூன்று சிறுமிகளையும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.” தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்று மாணவிகள் அடையாளம் தெரியாத ஒருவரால் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை வியாழக்கிழமை காவல்துறையில் தெரிவித்தார்.
போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மூன்று சிறுமிகளும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 வயது சிறுவனின் உதவியுடன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று சிறுமிகளையும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் மொட்டை மாடியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.